உயிரும் நீ உறவும் நீ - பகுதி 3

அஜய்யின் காரும் சாய்ஸ்ரீ கால் டாக்சியும் ஒரே நேரத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்குள் பிரவேசித்தது. அஜய் விஜய்க்கு கால் செய்ய சாய்ஸ்ரீ ப்ரீத்தாவிற்கு கால் செய்தாள்.

அஜய் - விஜய் கால்,

"டேய், எங்க டா இருக்க, " என்றான் அஜய்.

"இன்னும் கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்ல தான் இருக்கேன்" என்றான் விஜய்.

"காலேஜ் ல எங்க டா" என்றான் அஜய்.

"ஏன் இப்போ அத சொன்னா இங்க வரப்போறியா" என்றான் விஜய்.

"நான் ஆல்ரெடி வந்துட்டேன், நீ எங்க இருக்க, " என்றான் அஜய்.

"என்ன டா சொல்ற, சரி, நான் மார்ச்சுவரி கிட்ட இருக்கேன் வா" என்றான் விஜய்.

சாய்ஸ்ரீ - ப்ரீத்தா கால்,

"மேடம், நான் வந்துட்டேன், நீங்க எங்க இருக்கீங்க" என்றாள் சாய்ஸ்ரீ.

"நீ எங்க இருக்க மா, சொல்லு, நான் வரேன்" என்றாள் ப்ரீத்தா.

"மேடம், நான் இங்க அவுட் பேஷண்ட் வார்டு கிட்ட நிக்கறேன்" என்றாள் சாய்ஸ்ரீ.

"அங்கேயே இரு மா, நான் வரேன், என்ன டிரஸ் போட்டு இருக்க, " என்றபடி அவுட் பேஷண்ட் வார்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ப்ரீத்தா.

"நான் பிளாக் டாப் ரெட் பாட்டம் அண்ட் ரெட் ஷால் போட்டு இருக்கேன் மேடம்" என்றாள் சாய்ஸ்ரீ.

"நான் உன்னை பாத்துட்டேன் மா, நான் வந்துட்டு இருக்கேன் பாரு, உன்னோட லெப்ட் சைட் ல" என்றபடி சாய்ஸ்ரீ நோக்கி நடந்தாள் ப்ரீத்தா.

"நான் பாத்துட்டேன் மேடம்" என்றபடி பிரீத்தாவை நோக்கி நடந்தாள் சாய்ஸ்ரீ.

ப்ரீத்தாவின்அருகில் வந்ததும் சாய்ஸ்ரீ "மேடம், நீங்க தான் கால் பண்ணிங்களா, என்ன ஆச்சு மேடம், என்னை ஏன் எதுவும் சொல்லாம இங்க கூட்டிட்டு வந்திங்க" என்றாள் சாய்ஸ்ரீ.

"வா சொல்றேன்" என்றபடி மார்ச்சுவரி அருகே வந்தனர் இருவரும்.

அங்கே விஜய் மற்றும் அஜய் இருவரும் நின்றிருந்தனர்.

அஜய் அருகே வந்த ப்ரீத்தா, "டேய், நீ என்ன பண்ற இங்க" என்றாள்.

"ஏய், என்ன ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கற, அசோக் காக தான் வந்தேன்" என்றான் அஜய்.

"ப்ரீத்தா, காலைல இருந்து உன்கிட்ட ஒரு கலீக் ஆஹ் நடந்துக்கிட்டதுக்கு சாரி. வேற என்ன பண்றது, போலீஸ் ப்ரோடோகால். நான் இவன்கிட்ட எவ்ளவோ சொன்னேன், இங்க வரவேணாம், இது எங்க வேலை, நீ வந்தா சரியா வராது னு, பட்இவன் கேக்கல." என்றான் விஜய்.

"பரவால்ல விஜய், நானும் அப்டி தானே நடந்துக்கிட்டேன், வீ ஹாவ் டு , அஜய், எனக்கு ஒரு விஷயம் தான் புரியல, அசோக் இந்த பொண்ண பீஸ் கட்டி படிக்க வெச்சு இருக்கான், எனக்கு இது இவ்ளோ நாளா தெரியாது, அவனும் சொன்னது இல்ல நீங்களும் சொன்னது இல்ல, பர்ஸ்ட் டைம் நான் இவளை பாக்கறேன் அண்ட் இவளை பத்தி கேள்விப்படறேன். " என்றாள் ப்ரீத்தா.

"அது இல்ல ப்ரீத்தா, எங்களுக்கு தெரியும், இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு, ஆர்த்தி கூட தான் நிறையா பேரை படிக்க வைக்கறா, நெறையா பேருக்கு ப்ரோக்ராம் நடத்தி டொனேஷன் கலெக்ட் பண்ணி குடுக்கறா, மோரோவர், இந்த ஆர்த்தி அண்ட் ஹர் சிப்லிங்ஸ், அசோக், சாய்ஸ்ரீ இவங்க எல்லாருமே அந்த எம்.என். டீ. என் ஆஸ்ரமத்துல இருந்து படிச்சு வந்த ப்ராடக்ட் தான்" என்றான் விஜய்.

"நீ மட்டும் என்ன விஜய், அதே தானே" என்றான் அஜய்.

"டேய், நான் தான் அடாப்டட் ஆய்ட்டேனே " என்றான் விஜய்.

"சோ வாட், பத்து வயசுல தானே அடாப்ட் பண்ணாங்க, அப்பகூட அவங்க அசோக் அஹ் தான் அடாப்ட் பண்ணாங்க, ஆனா அசோக் அப்பவே அதுல விருப்பம் இல்ல னு சொல்லிட்டான், அதுனால அவங்க உன்னை அடாப்ட் பண்ணிட்டாங்க" என்றான் அஜய்.

"அதுனால என்ன டா, இப்போ அது முக்கியம் இல்ல, பர்தரா என்ன நடக்கும் னு தான் பாக்கணும்." என்றபடி சாய்ஸ்ரீ அருகில் வந்தான் விஜய்.

"சாய்ஸ்ரீ, எப்படி இருக்க, ரொம்ப நாள் கழிச்சு உன்ன பாக்கறேன், ஆனா இந்த சந்திப்பு ஒரு மனக்கஷ்டத்தோட தான் இருக்க போகுது, நான் பத்து வயசுல அடாப்ட் ஆகி போன போது உனக்கு ஆறு வயசு, எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கு, நீ நான் ஆர்த்தி அசோக் ஆர்த்தி தம்பி தங்கை எல்லாரும் ஒண்ணா ஸ்கூல் கு கெளம்பி போவோம், நீ வரமாட்டேன் னு அழுவ, நான் உன்ன தூக்கிட்டு எல்லாம் போயிருக்கேன், உனக்கு ஞாபகம் இருக்குமா னு தெரில, " என்றான் விஜய்.

"விஜய், திஸ் இஸ் நாட் தி டைம் பார் டிஸ்கஸிங் ஆல் தீஸ், " என்றபடி ப்ரீத்தா சாய்ஸ்ரீ பக்கம் திரும்பி " சாய்ஸ்ரீ, எனக்கு எப்படி சொல்லணும் னு தெரில, ஒரு சாதாரண கேஸ் அஹ் இருந்தா நான் ஈஸியா சொல்லி இருப்பேன், ஆனா இது எனக்கு ரொம்ப பர்சனல் ஆயிருச்சு, ட்யூ டு தி சர்கம்ஸ்டன்சஸ், ரொம்ப ஸ்ட்ரெட்ச் பண்ணவேணாம், டெரெக்ட்டா சொல்றேன், அசோக் இஸ் நோ மோர், யாரோ கொன்னு இருக்காங்க, டிவி ல புல்லா இந்த நியூஸ் தான், பார்மாலிடீஸ் எல்லாம் முடிஞ்சு போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டாங்க, எக்ஸ்பெக்ட்டிங் தி ரோபோட்ஸ் இன் கப்புள் ஆப் டேஸ். ஆஸ் தி பாடி இஸ் அட்டாப்சிட், வீ காண்ட் கீப் பார் லாங் டைம், ஆல்சோ அசோக் கு யாரும் இல்ல, உன்னை தவிர, ஈவன் நீ கூட சொந்தம் எல்லாம் கொண்டாட முடியாது, ஆஸ் பேர் ரெக்காட்ஸ், அவன் உன்னை ப்ராப்பர் ஆஹ் அடாப்ட் எல்லாம் பண்ணல, ஜஸ்ட் உனக்கு பீஸ் கட்டி படிக்க வெச்சு இருக்கான், திஸ் கெனாட் பி கன்சிடர்ட் ஆஸ் அடாப்ட்டேஷன், ஏன்னா அதுக்கான ப்ராப்பர் டாக்குமெண்டேஷன் ஏதும் இல்ல, சோ, உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன உறவு னு எங்களால ஏதும் சொல்ல முடியாது, யு கென் கோ அண்ட் சி ஹிஸ் கார்ப்ஸ், பிபோர் வி ஸ்டார்ட் தி க்ரிமேஷன். வேலங்காடு எலக்ட்ரிக் க்ரிமேஷன் ல கவர்மெண்ட் அவங்க ப்ரொசீஜர் படி எல்லாம் பண்ணிடுவாங்க, பட், அதுக்கு எவ்ளோ வேணாலும் டைம் எடுக்கும், ஏன்னா இது நார்மல் டெத் ஆர் ஆக்சிடென்ட் டெத் இல்ல, மர்டர், சோ பாடி மே பி கெப்ட் இன் மார்ச்சுவரி டில் கெட்டிங் க்ளியர்ட்." என்றாள் ப்ரீத்தா.

சாய்ஸ்ரீ எதுவும் பேசாமல் அப்படியே சிலை போல் நின்றுவிட்டாள், கண்கள் மட்டும் கண்ணீரை கொட்ட தொடங்கியது.

"சாய்ஸ்ரீ, அழாத, சி இப்போ நீ தைரியமா இருக்கணும், இன்னும் நெறையா பேஸ் பண்ணனும் நீ லைப் ல" என்றான் அஜய்.

"அஜய் அண்ணா, கண்டிப்பா இது அநியாயம், அசோக் யாருக்கு என்ன தீங்கு பண்ணினாரு, அவருக்கு ஏன் இப்படி" என்றாள் சாய்ஸ்ரீ.

"அஜய், உன்னை நல்லா தெரியுமா சாய்ஸ்ரீ கு" என்றாள் ப்ரீத்தா.

"தெரியும் ப்ரீத்தா, அசோக் மட்டும் இல்ல, நான் கூட இவளோட படிப்புக்கு டொனேட் பண்ணிருக்கேன்," என்றான் அஜய்.

"சாய்ஸ்ரீ, இந்த நேரத்துல நான் கேக்கறது தப்பு தான், பட் ஆஸ் எ போலீஸ் நான் என் கடமையை செய்யணும் ல, உனக்கும் அசோக் கும் நடுல என்ன மாதிரி ரிலேஷன்ஷிப் இருந்துச்சு, அவன் என்னிக்காவது உன்னை தப்பான கண்ணோட்டத்தோடு பாத்ததா உனக்கு ஏதும் தோணி இருக்கா, ஆர், வேற எப்படி கேக்கறது, சரி நேரடியா கேக்கறேன், அவன் உன்கிட்டயோ நீ அவன்கிட்டயோ ஏதும் ப்ரபோஸ் பண்ணி ஆர் காதல் ......" திணறிய விஜய் வாய் அடைக்கும்படி சாய்ஸ்ரீ, "அசோக் கை இல்ல, அவர் கண் கூட என்னை தொட்டதில்லை, என் கண்களை தாண்டி அசோக் பேசினதே இல்லை, அவருக்கு என் மேலயோ எனக்கு அவர் மேலயோ அந்த மாதிரி தவறான எண்ணங்கள் இருந்தது இல்ல," என்றாள் சாய்ஸ்ரீ.

"சாய்ஸ்ரீ, டோன்ட் மிஸ்டேக் மீ, நான் அந்த பார்த்ததுல கேக்கல, " விஜய் முடிப்பதற்குள், "நீங்க எந்த பார்த்ததுல கேக்கறீங்க னு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல, எந்த பார்த்ததுல கேட்டாலும் பதில் இது தான், எனக்கு அவர்மேலயோ அவருக்கு என்மேலேயோ எந்த தவறான நோக்கமும் இருந்தது இல்ல" என்றாள் சாய்ஸ்ரீ.

"உனக்கு இல்ல, ஓகே, ஆனா அசோக் கு இல்ல னு உன்னால எப்படி சொல்ல முடியும், அவனுக்கு இருந்து இருக்கலாம், அதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம், அதுக்கான நேரம் பாத்து காத்து இருந்திருக்கலாம், இல்லையா?" என்றான் விஜய்.

"கண்டிப்பா அப்டி இருக்க வாய்ப்பே இல்ல, ஏன்னா அசோக் என்கூட நிறைய டைம் தனிமை ல இருந்தப்ப கூட எனக்கு எந்த விகல்ப்பமும் எந்த தவறான நோக்கமும் அவர்கிட்ட இருந்ததா உணரல, பயணங்கள், சினிமா தியேட்டர், பீச்... இவ்ளோ ஏன், நாங்க ஒரு ஆறு மாசம் முன்னாடி டூர் போயிருந்தப்போ கூட அவர் என்னோட ரூம் ல தான் தங்கினார், எனக்கோ அவருக்கோ எந்த ஒரு மூன்றாவது மனித பீல் வரல" என்றாள் சாய்ஸ்ரீ.

"ஓ ஐ சி, நாங்க மீன்ஸ் யாரு" என்றான் விஜய்.

"நாங்க மீன்ஸ் நான் அசோக் ஆர்த்தி அண்ட் அவங்க சிப்லிங்ஸ்" என்றாள் சாய்ஸ்ரீ.

"ஓ அப்போ தான் அந்த ஆக்சிடென்ட் நடந்துச்சு இல்ல, ஆர்த்தி சிப்லிங்ஸ் இறந்து போனது" என்றான் விஜய்.

"ஆமா, நாங்க ஊட்டி கு பைக் ல பிளான் பண்ணினோம், எனக்கும் பைக் ஓட்ட தெரியும், அண்ட் சோ நாங்க பைக் ஹயர் பண்ணினோம் பார் மீ அண்ட் வினோத். அசோக் கிட்ட பைக் ஆல்ரெடி இருக்கு, சோ எனக்கு ஒரு பைக் அண்ட் வினோத் கிட்ட நார்மல் டி வீ எஸ் ஜெஸ்ட் தான் இருந்துச்சு, சோ அவனுக்கு ஒரு பைக் ஹயர் பண்ணோம், என்னோட பைக் ல நான் அண்ட் என்னோட பிரென்ட் சந்தியா , வினோத் பைக் ல அவன் அண்ட் அவனோட தங்கை ஷர்மதி வந்தாங்க, அசோக் பைக் ல அசோக் அண்ட் ஆர்த்தி வந்தாங்க. நல்லா தான் இருந்துச்சு அந்த ட்ரிப், ஆனா அன்பார்ச்சுனேட்லீ ரிட்டன் வரும்போது தர்டிபிப்த் ஹேர்பின் பெண்ட் ல பைக் கண்ட்ரோல் இல்லாம அப்செட் ஆயிருச்சு" என்றாள் சாய்ஸ்ரீ.

"சாய்ஸ்ரீ, நான் அந்த ஆக்சிடென்ட் பத்தி கேக்கல மா, இந்த கேஸ்குள்ள வாங்க, ஏன் அசோக் ஆர்த்தி கூட ஸ்டெ பண்ணாம உங்ககூட ஸ்டெ பண்ணனும், ஆர்த்தி தான் அசோக் அஹ் லவ் பண்ணாங்களே, ஆர்த்தி கூட தங்கி இருக்கலாமே, " என்றான் விஜய்.

"இருக்கலாம், ஆனா அப்போ ஆர்த்தி அண்ட் அசோக் லவ் பண்ணது அவங்க தம்பிக்கும் தங்கைக்கும் தெரியாது, சோ அது தெரிய வேணாம் னு தான் அந்த பிளான் போடும்போதே நாங்க டிசைட் பண்ணோம். " என்றாள் சாய்ஸ்ரீ.

"ஓ, அப்போ சென்னை ல இருந்து ஊட்டி போற வரைக்கும் பைக் ல வந்தப்போ அவங்க காதலிக்கிற விஷயம் தெரிஞ்சு இருக்காதா, " என்றான் விஜய்.

"அதை நீங்க என்கிட்டே கேட்கக்கூடாது" என்றாள் சாய்ஸ்ரீ.

"அது சரி, அந்த ஊட்டி ல உங்ககூட அசோக் எப்படி நடந்துக்கிட்டாரு, ஐ மீன் ஹோல்ட்டிங் ஹேண்ட், டச்சிங் எக்ஸட்ரா" என்றான் விஜய்.

"விஜய், இட்ஸ் இனப், டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ், இது எல்லாம் லேடி போலீஸ் தேவைப்பட்டா விசாரிச்சுப்பாங்க, டோன்ட் ஓவர் ரூல் யுவர் லிமிட்ஸ்" என்றாள் ப்ரீத்தா.

"இல்ல ப்ரீத்தா, இது நமக்கு ஒரு பெரிய தலை வலி, மோரோவர், நான் தப்பான நோக்கத்துல எதுவும் கேக்கல, அசோக், சாய்ஸ்ரீ, ஆர்த்தி எல்லாரும் எனக்கும் ரொம்ப க்ளோஸ் தான், அதை நீ புரிஞ்சுக்கோ" என்றான் விஜய்.

"ஐ டூ அண்டர்ஸ்டெண்ட் யுவர் மோட்டிவ், பட் நீ ஒரு சின்ன பொண்ணு, அதுவும் வால்நரபில் ஏஜ்ல இருக்கற ஒரு பொண்ணுகிட்ட இப்டி பேசறது நல்லா இல்ல, அவ கண்டிப்பா நம்ம என்குயரி கு ஒத்துழைப்பா, சோ இப்போ ஜஸ்ட் அர்ச்சனா மேடம் கு இன்பாம் பண்ணிட்டு வி ஷல் மூவ்." என்றாள் ப்ரீத்தா.

"ம்ம், ஐ வில் கால் அர்ச்சனா மேடம்" என்றபடி போனை எடுத்து சற்று விலகி நடந்தான் விஜய்.

"அஜய், சாய்ஸ்ரீ, நீங்க உள்ள போயி அசோக் கார்ப்ஸ் பாத்துட்டு வாங்க, வில் மூவ் இன் நெக்ஸ்ட் பியூ மினிட்ஸ்" என்றாள் ப்ரீத்தா.

சாய்ஸ்ரீ கண்கள் கலங்கியபடியே அஜயுடன் மார்ச்சுவரி உள்ளே சென்றாள்.

"விஜய், உனக்கு அறிவு இருக்கா, நீ எல்லாம் எப்படி க்ரைம் ப்ரான்ச் ல இன்வெஸ்டிகஷன் கிளியர் பண்ண, சஸ்பெக்ட் ஆர் ஜெனரல் என்கொயரி, யூ மஸ்ட் பி கிளியர் இன் யுவர் அப்ப்ரோச். நீ இப்டியே பண்ணிட்டு இருந்தா யாரும் உன்னோட இன்வெஸ்டிகேஷன் கு யாரும் சப்போட் பண்ணமாட்டாங்க, நீ ஒரு கொலை பத்தி இன்வெஸ்டிகேட் பண்ற, ஏதோ கள்ள தொடர்பு பத்தி இன்வெஸ்டிகேட் பண்றமாதிரி பண்ணிட்டு இருக்க, " என்றாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா, சும்மா சொல்லாத, எல்லா சைடு ல பூந்து ஆராய்ச்சி பண்ணாதான் உண்மையை கண்டுபிடிக்க முடியும். " என்றான் விஜய்.

"அது சரி, அப்டி விசாரிச்சா அந்த மூணு பெண்டிங் மர்டர்ஸ் நீ கண்டு புடிச்சு இருக்கணுமே, ஏன் இன்னும் கிடப்புல கெடக்கு, இன்னும் த்ரீ வீக்ஸ் ல அதுக்கு நீ அடுத்த கட்ட ரிப்போட் குடுக்கலானா உனக்கு மெமோ மட்டும் இல்ல தம்பி, டிபாட்மென்ட் சேஞ் கூட ஆகும் னு அர்ச்சனா மேடம் சொன்னாங்க" என்றாள் ப்ரீத்தா.

"ஆமா அவங்க பெரிய அப்பாடக்கர், அவங்களோட கேஸ் தான் அது, அதுல ஒண்ணும் பண்ண முடியாம என்னோட தலை ல தூக்கி போட்டாங்க, எப்பவுமே சீனியர்ஸ் கு பனிஷ்மென்ட் கெடயாது, என்னை போல....." விஜய் சொல்லி முடிப்பதற்குள் "ஹ்ம்ம்" என்று ஆச்சர்ய தோரணையில் கேட்டாள் ப்ரீத்தா.

"சரி, நம்மள போல ஜூனியர்க்கு தான் பனிஷ்மென்ட் எல்லாம், ஆனா ஏதும் துப்பு கிடைச்சா மட்டும் பிரஸ் கு இவங்க பேட்டி குடுத்து என்னவோ இவர்களே கண்டுபுடிச்சா மாதிரி பேசுவாங்க, இது எல்லா, சகஜம்" என்றான் விஜய்.

"விஜய் வயித்தெரிச்சல் வெளில அப்பட்டமா தெரியுது, சரி அவங்க ரெண்டு பெரும் வராங்க, கீப் ஷட் யுவர் மவுத் அண்ட் பி பேஷன்ஸ். எடுத்தோம் கவுத்தோம் னு பண்ணாத, இது ஆர்டினரி கேஸ் இல்ல, உன்னோட பிரென்ட், என்னோட உட்பி கு பிரென்ட், என்னோட வேலை ல அவ்ளோ சப்போட் பண்ண ஒரு இன்டெலிஜெண்ட் பாரன்சிக் பெத்தோலோஜிஸ்ட். சோ டீல் வித் யுவர் கான்செண்ட்ரேஷன்" என்றாள் ப்ரீத்தா.

"சரி சரி, எப்படியும் மூணு வாரத்துல எனக்கு எந்த துப்பு கிடைக்க போறது இல்ல னு நல்லா தெரிஞ்சுபோச்சு, அப்டியே நான் ஒரு பக்கம் விசாரிச்சாலும் அது என்ன இது என்ன அங்கே என்ன ஆச்சி இங்கே என்ன ஆச்சி னு இந்த அர்ச்சனா மேடம் என்னை வெச்சு செய்வாங்க, என்னோட வேலை ல என்னை ஒழுங்கா செய்ய விட மாட்டாங்க. அவங்களுக்கு என்மேல ஒரு வெறுப்பு, அது ஏன் னு எனக்கு இப்போ வரை தெரில," என்றான் விஜய்.

"ஏன், அவளோட அண்ணன் உன்னோட பிரென்ட் தானே, அவன்கிட்ட சொல்லி கேக்க சொல்லு" என்றாள் ப்ரீத்தா.

"எதுக்கு, இருக்கற கொஞ்ச நஞ்ச கருணையும் குழி தோண்டி புதைக்கவா" என்றான் விஜய்.

"ஒரு பிரென்ட் கொலை நடந்து இருக்கு, நீ ஏன் இவ்ளோ ஈஸி கோயிங் ஆஹ் இருக்க விஜய், வாட்ஸ் ராங் வித் யூ?" என்றாள் ப்ரீத்தா.

"ஆமா பொல்லாத பிரென்ட், அந்த ஆர்த்தி கு சப்போட் பண்ணி என்னை எவ்ளோ வெச்சு செஞ்சான் தெரியுமா?" என்றான் விஜய்.

"ஆமா, தெரியாம தான் கேக்கறேன், நீயும் அந்த ஆர்த்தியும் ஏன் டா இப்டி எலியும் பூனையுமா இருக்கீங்க, அவ ரொம்ப இன்னொசென்ட் டா, பாவம், அவளுக்கு னு யாரு இருக்கா" என்றாள் ப்ரீத்தா.

"என்மேல எந்த தப்பும் இல்ல, எல்லாம் அந்த ஆர்த்தி மேல தான், உனக்கு ஞாபகம் இருக்கா, அந்த பிரவீன் விஜி கேஸ்" என்றான் விஜய்.

"யா, ஆமா, ஞாபகம் இருக்கு, லாஸ்ட் இயர் ஏப்ரல் ல, உனக்கு கூட மெமோ சஸ்பென்ஸன் எல்லாம் குடுத்தாங்களே, அதானே?" என்றாள் ப்ரீத்தா.

"போதும், நான் பொதுவா கேக்கல, ஆனா ஒரு விஷயம், அந்த கேஸ் ல...." விஜய் முடிப்பதற்குள் "ஐயோ போதும், எல்லாத்துக்கும் ஜஸ்டிபிகேஷன் வெச்சுட்டு என்னை சாகடிக்காதே, அவங்க வந்துட்டாங்க, வா கிளம்பலாம்" என்றபடி ப்ரீத்தா சாய்ஸ்ரீ மற்றும் அஜயை நோக்கி நடந்தாள்.

"நான் பேசினா மட்டும் உடனே ஸ்டாப் பண்ணிடறாங்க பா, போலீஸ் டிபாட்மென்ட் ல எனக்கு சப்போட் ஆஹ் யாருமே இல்ல" என்றபடி பின்னாலேயே விஜய் நடந்தான்.

"ப்ரீத்தா, சாய்ஸ்ரீ ய நீ உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு, இனிமே அவ கொஞ்ச நாளைக்கு ஹாஸ்டல் ல இருக்க வேணாம். அதுக்கான பர்மிஷன் எல்லாம் நீ போலீஸ் டிபாட்மென்ட் வழியா பாத்துக்கோ. இப்போ நீங்க ரெண்டு பெரும் வீட்டுக்கு போய்ட்டு சேஞ் பண்ணிட்டு என்னோட வீட்டுக்கு வந்துருங்க. விஜய் யூ டூ ... நான் கிளம்பறேன், மனசே சரி இல்ல, இவனுக்கு ஏன் இந்த நிலைமை" என்றபடி காரை நோக்கி நடந்தான் அஜய்.

பகுதி 3 முடிந்தது.

எழுதியவர் : நிழலின் குரல் (22-Apr-24, 8:01 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 32

மேலே