கலால்
ஏனுங்க பையன் பொறந்து ஒரு வாரம்
ஆகுது. இன்னும் பேரு வைக்கலிங்களே!.
@@@@
ஆமாம் காவேரி. நானும் புதுமையான
இந்திப் பேருங்களத் தேடிட்டு தான்
இருக்கிறேன்.
@@@@@@@
ஏனுங்க எனக்கு ஒரு யோசனை தோணுது.
இன்னைக்கு செய்திலே என்னமோ ஒரு
பேரைச் சொல்லி 'தலால்'னு சொன்னாங்க.
நாம் நம்ம பையனுக்கு 'கலால்'னு வச்சா
நல்லா இருக்குமுங்க. இந்திப் பேரு
மாதிரியே 'கலால்'உம் இருக்குதுங்க.
@@@@#@##
அருமையான பேரு காவேரி. நம்ம எட்டுப்
பட்டி கிராமத்தில் யாரும் அவுங்க
குழந்தைக்கு வைக்காத பேரு 'கலால்'.
இந்தப் பேரைக் கேள்விப்பட்ட நம்ம எட்டுப்
பட்டி கிராம மக்களும் 'கலால்' அருமையான
பேருனு பாராட்டுவாங்க காவேரி. இந்த
அருமையான பேரைக் கண்டுபிடிச்ச
உனக்குத் தங்க வளையல் வாங்கித்
தர்றேன் காவேரி.
@@@@@@
ரொம்ப சந்தோசமுங்க மாமா.