கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -25

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -25

" காதல் செய்வது சுலபம், வெல்வதற்கு தேவை அனைத்திலும் அதிக பலம் " என்பதை உணர்ந்து கொண்டவர்களாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்த காதலர்கள்..

லட்சியத்தில் மாறாமல் திருமண வாழ்வில் சாதிக்க விரும்பினார்கள்.

ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, ஆட்டோ ஓட்டுனரிடம் அண்ணா.2 சவரன் தங்க செயின் எங்ககிட்ட இருக்கு  அடகு வைக்க கடைகள் ஏதும் உண்டா?, என்று கேட்டான்.. எனக்கு தெரிந்த இடத்தில் அடகு வைத்து தருகிறேன் தம்பி.. என்றார் ஓட்டுனர்.. கெளதம் இதுவரை எங்க கூடவே  நல்ல  உதவியா இருந்திங்க நன்றி அண்ணா ! என்றான்..

அடுத்து எங்க போறீங்க தம்பி? என்றார் ஓட்டுனர், குமுளி போகனும் என்றான்.. இரவு 12.00 மணிக்கு மேல் குமுளி போற பஸ் வரும் அதுல போன.. காலையில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள்‌ போயிடலாம், இரவு 12 மணிக்கு மேல் உங்க வீடுகளில் தேடுவோர், தேடுவதற்கு வாய்ப்பு இல்லை..12.00 மணிவரை என் வீட்டில் இருந்து கொள்ளுங்கள் என்றார் ஓட்டுனர்..சரி என்றனர் காதலர்கள்..

இரவு 7.00 மணி ஆகியிருந்த நிலையில் திரிஷாவின் அப்பா கமல், உற்றார் உறவினர் அனைவரும் படை சூழ வெவ்வேறு வாகனங்களில் கிளம்பி,நேராக கெளதம் வீட்டிற்கு வந்தனர், கெளதம் வீட்டை பார்த்ததும் அதிர்ச்சி ஆனார்..

" வீடு மாறி ஆனால் வீடு இல்லை " ஓடு போட்டு அதற்கு மேல் ஆங்காங்கே மழை நீர் இறங்கமால் இருக்க பழைய பேனர்கள்கள் ஓட்டைகள் மறைக்கப்பட்டு இருந்ததை பார்த்த கமல் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்...

வீட்டினுள் நுழைந்த கமலை கட்டிலில் படுத்திருந்த கெளதமின் அப்பா..வந்தோரை வரவேற்கும் தமிழ் பண்பாட்டின் படி வரவேற்றார்..
கமல் : எங்க உன் பையன்? (கோபத்துடன்)
சிங்காரம்: அவன் சென்னையில் வேலை பார்க்கிறான் ( சொல்லி முடிப்பதற்குள்)
கமல்: உன் பையன் சென்னையில் கிழிச்சன்.. அந்த நாய் என் மகளை கூட்டிட்டு ஓடிட்டான்..
சிங்காரம்: உன் மகளுக்கு அரிப்பெடுத்து என் மகனை கூட்டிட்டு ஓடியிருப்பா ..
கமல் சிங்காரத்தை அடிக்க கை ஓங்க சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தடுக்க, கெளதம் ஊரின் நாட்டாமை குருசாமி வந்தார்,

கமலை பார்த்து எங்க வந்து யாரை அடிக்க போறீங்க.. என்றார் நாட்டாமை குருசாமி..

ஐயா .. தப்புதான் !,ஏன் பொண்ணு வசதியா வாழ்ந்த பொண்ணு, தோட்டம்,பார்க்னு வசதியான வீடு..
தோட்டத்தில் உள்ள ஊஞ்சலுக்கு ஈடாகாது இந்த வீடு.. இந்த பிச்சைக்காரப் பையலுக்கு வசதியான வீட்டு பொண்ணு கேட்கோ.. என்று வாய்க்கு வந்ததை பேசினார் கமல்..

இப்படி பேச இரு தரப்பினரும் அடிதடியில் இறங்க,ஊரே கூடி கமலின் குழுவினரை ஓட ஓட விரட்ட.. கமல் அந்த நாயயை (கெளதமை) துண்டு துண்டாக வெட்டி உங்க ஊர்ல வந்து போடுவேன்டா என்றார்

நாட்டாமை குருசாமியோ வெட்டி பாருடா.. பார்ப்போம்.. என்று பதிலுக்கு மிரட்டல் விட..கமல் அன் கோ எஸ்கேப்..

வீட்டுக்கு அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் அவர் மனைவியிடம் விவரத்தை சொல்ல பழகிய உறவு போல் பேசத் தொடங்கினார் ஓட்டுனர் மனைவி..

உடைகளை திரிஷாவின் கையில் கொடுத்த ஓட்டுனர் மனைவி குளிச்சிட்டு வா என்றார்..

ஈரக் கூந்தல் ராமனின் கோட்டை மீதுள்ள கொடியாக காற்றில் ஆட.. ஊட்டி பூந்தோட்டம் மலர் வாசம் காற்றில் மிதந்து வர , பச்சை நிற சுடிதாரில் திரிஷா ஒரு திரி(3) ரோஜாவாக மலர்ந்தாள், அவளை பார்த்த கெளதம்..
"அந்த நிலவுக்கும் வானம் நானோ
ஆந்த விழியான் நானும் இணைதானோ
இந்த தாமரைக்கு கதிரவன் நானோ
ஈதல் அறியாதோன் இவளுக்கும் ஈடோ
உளைப்பூ அழகிக்கு உதவாக்கரை உரிமையோ "
கவிதை வரிகள் கற்பனைக் கதவை தட்ட கண்களில் ஆனந்தக் கண்ணீர்..

இரவு 12.05 க்கு பேருந்தில் ஏறியவர்கள்..

.... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (22-Apr-24, 3:41 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 27

மேலே