திருப்பதி மொட்டை

கணவன்: ஏம்மா, எதையோ கோட்டை விட்ட மாதிரி ரொம்ப பதட்டமா இருக்கே? வீட்டை சரியாக பூட்டிட்டுத்தானே வந்தோம்.

மனைவி: ஆமாங்க

கணவன்: சரியா பூட்டியிருக்கான்னு தெரிந்து கொள்ள, பூட்டை நீ நல்லா உலுக்கிவிட்டதையும் நான் பார்த்தேனே!

மனைவி: ஆமாங்க

கணவன்: அப்புறம் எதுக்கு இப்படி படபடப்பா இருக்கே, ஆடு திருடிய கள்ளி மாதிரி?

மனைவி: வந்து. வந்து..சாவியை பூட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன்.

கணவன்: ஐயோ, ஐயோ. வீட்டில் எவன் நுழைஞ்சானோ, என்ன சுருட்டினானோ தெரியவில்லையே! திருப்பதிக்கு வந்ததுதான் வந்தோம். ரெண்டு பேரும் இங்கேயே மொட்டையும் போட்டுக் கொண்டு, கோவிந்தா..கோவிந்தா..ன்னு கூவிக்கொண்டே ஊரு திரும்பலாம்.

மனைவி: நீங்க கோயிந்தா கோயிந்தான்னு கூவுங்க. நான் போயிந்தா போயிந்தான்னு கூவரேன்.

கணவன்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-May-24, 1:57 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 32

மேலே