அல்கா

எதிர் வீட்டு பங்காளி அவன் பெண் குழந்தைக்கு என்ன பேருடா

வச்சிருக்கிறான்.

@@@@@@@@


கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க பாட்டி . யோசனை பண்ணிச்

சொல்லறேன்.



@@@@@@@@@@

எதோ புதுமையான பேரா வைக்கிறதா பீத்திட்டு திரிஞ்சான். அது

தான் அந்தப் பேரைத் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கிறேண்டா பேரா.


@@@@@@@@@@@@

இப்ப ஞாபகம் வந்திருச்சு. நம்ம ஊர்ல எல்லாக் குழந்தைகளுக்கும்


இந்திப் பேருங்களத்தான் வச்சிருக்கிறோமாம். அவர் தன் பெண்

குழந்தைக்கு அழகான சமஸ்கிருதப் பேரை வச்சிருக்கிறதா

பெருமையாச் சொல்லிட்டு திரியாரு.


@@@@@@@@@@

சரி அந்தப் பேரு என்னனு சொல்லுடா பேரா. நல்ல வேளை அவன்


தன் குழந்தைக்குத் தமிழ்ப் பேரை வைக்கல. உண்மையான தமிழன்

அவன்ங்கிறதை நிரூபிச்சுட்டாண்டா பேரா. சரி. அந்தப் பேரைச்

சொல்லுடா பேரா.


@@@@@@@@@@

சொல்லறேன். 'அல்கா' தான் அந்தக் குழந்தையோட பேரு,

@@@@@@@@@@@@


அல்கா. டேய் பேரா அடுத்த மாசம் உன் மனைவிக்கு குழந்தை

பிறக்கப் போகுது. அவள் நாடியைப் பிடிச்சுப் பார்த்தேன். கண்டிப்பா


பெண் குழந்தை தான் பிறக்கும். நீ அந்தக் குழந்தைக்கு இதே மாதிரி


பேரை வச்சு அந்தப் பேரு அழகான சமஸ்கிருதப் பேருன்னு

சொல்லிடு. நம்ம மக்கள் நம்பிடுவாங்க. சுவீட்டு நேமுன்னும்


சொல்லிடுவாங்க.

@@@@

நம்ம பங்காளி குழந்தை பேரு 'அல்கா'. என்னோட பெண்


குழந்தைக்கு 'கல்கா, மல்கா, பல்கா, நல்கா' மாதிரி ஒரு பேரை

வச்சிடலாம். இதில நீங்களே ஒரு பேரைத் தேர்ந்தெடுங்க நூறாவது

பிறந்த நாள் போன வருசம் கொண்டாடிய பெருமைக்குரிய எனது

அருமைப் பாட்டி.


@@@@@@@@@@

அப்பிடியா. 'அல்கா'. அதுக்குச் சரியான போட்டிப் பேரு 'கல்கா'.


அருமையான சமஸ்கிருதப் பேருன்னு பெருமையா நம்ம

ஊராருக்கெல்லாம் சொல்லிடுடா பேரா.

@@@@@@@@@

அருமை. அருமை பாட்டி. 'அல்கா'. 'கல்கா'. நாஞ் சொல்லறதைக்

கண்டிபபா மக்கள் நம்பிடுவாங்க. ரொம்ப நன்றி பாட்டி.

@@@@@@@@@

வாழ்த்துகள்டா பேரப் பையா பிரேம்குமார் காதல் இளவரசா.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Alka = Bright, Shining . ,

Prem = Love

Kumar = Prince , Young boy

எழுதியவர் : மலர் (4-Jun-24, 5:57 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 20

மேலே