என் கனவு
என் கனவு
😞😞😞😞😞😞😞
சாதி சாதி எனச் சொல்லும் தலைவனையே அழிக்கனும்...
சாதிக்களம் பதியச் சொன்ன அரசிதழைக் கிழிக்கனும் ...
பெண்ணையும் ஆணையும் சமமாக மதிக்கனும்
இருவர் வயிற்றிலுமே கருவறை இருக்கனும்...
பதவியும் வேலையும் உரியவர்க்குக் கிடைக்கனும்....
அரசுக்குச் சொந்தமென சொத்துகளை அடக்கனும்...
இலஞ்சம் என்ற சொல் நெஞ்சினில் நினைக்கினும்
சிறைச்சாலை சுவருக்குள் வாழ்நாளை முடக்கனும்...
முதியோர் என்ற வார்த்தை முற்றிலும் ஒழிக்கனும்
அறிவில் பழுத்தோரென சமுதாயம் அழைக்கனும்...
அரசியல் செய்வோர்க்கு தகுதி வரையறுக்கனும்
ஊழலேதும் நிகழுங்கால் மக்களே உதைக்கனும்...
போதைப்பொருள் உலகினில் எங்கெங்கு கிடைக்கினும்
விளைவித்த மனிதனை விளை நிலத்தில் புதைக்கனும்...
பாலியல் குற்றங்களை ஊடகம் மறக்கனும்
கொலைச்செயல் பதியாத வரலாறு படைக்கனும்...
கருணைமனம் நிறைந்தவனாய் தமிழரினம் இருக்கனும்
அப்பெருமை உலக மக்கள் தமிழ் மொழியில் படிக்கனும்...
😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌