Nagarajan 16062024

கல்லூரி விழா... நாகராஜன்
நீ ஆடிய அழகிய பரதம்...
யாரும் சொல்லாமலேயே
அன்று உனக்கு சூட்டப்பட்டது
விழா நாயகன் மகுடம்...

மதுரை அரசாளும் மீனாட்சி..
அழகிய பாடலுக்கு உந்தன்
அற்புத அபிநயங்கள் இன்னும்
எந்தன் கண்களில்.. சலங்கை
சத்தம் என் காதுகளில்...
எல்லாம் அழகின் உச்சம்..
இன்றைய யூடியூப் பதிவுகள் கூட
இரண்டாம் பட்சம்...

நாகராஜன்...
ஆடல் பாடல்களில் உனது
நாட்டம்... நான் நினைப்பேன்
படிப்பில் நீ சுமார் என்று.. பின்புதான்
நான் தெரிந்து கொண்டேன்
அதிலும் சூப்பர் என்று...

நாற்பது ஆண்டு காலத்திற்கு
முன்பு.. நிகழ்வு ஒன்று
நினைவிற்கு வருகிறது...
கல்லூரியில் ஓவியக் கண்காட்சி..
நான் வெள்ளைத் தாளில்
ஓவியம் எதுவும் வரையாமல்
வெள்ளைப் புறா ஒன்று
போகுது கண்ணில் படாமலே
என்று எழுதி கண்காட்சியில்
ஒட்டி வைத்தேன் சற்றே
குறும்புத்தனம் கலந்து..

அதையும் புத்தம் புது
புத்தகங்களின் பக்கங்களாய்
முதலாண்டு மாணவக் கண்மணிகள்
கலர் கலராய் புதுப் புது
ஆடைகள் அணிந்து
கூட்டம் கூட்டமாய் பார்த்து ரசித்து
இதற்கு என்ன அர்த்தம்
என்று வினவியபோது நீ அதற்கு
உலகில் அமைதி எனும்
வெள்ளைப் புறா இல்லாமல்
போனதை ஓவியர் குறிப்பால்
உணர்த்துகிறார் என்றாய்...
மாணவக் கூட்டம் ஆர்ப்பரித்தது..

நாகராஜன்...
ஓவியமே இல்லாத வெள்ளைத்
தாள் கூட உன்னால் அர்த்தம்
பெற்றது... கல்வி செல்வம்
விவேகம் தான தர்மம்.. பரதம்
எல்லாம் கொண்ட உன் வாழ்வு
அர்த்தங்கள் ஆயிரம் கொண்டது..
எல்லோருக்கும் எடுத்துக்காட்டானது..

அன்பு நண்பன் நாகராஜன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
வானம் வசப்பட வாழ்க பல்லாண்டு..

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🪷🌷👍🌺🙏😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (29-Jun-24, 2:58 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 67

மேலே