Aswini

ஜூன் பன்னிரண்டு..
இதில் பிறந்தோர்க்கெல்லாம்
இருக்கும் தேனினும் இனிய இதயம்
அஸ்வினி சுபத்ரா
இதற்கு சாட்சி.. அது நம்
கண்ணில் தெரியும் காட்சி..

அஸ்வினி சுபத்ரா...
புத்தகங்களின் பக்கங்களில்
துள்ளித் திரிந்த இந்த மான்
ஆட்டோமொபைல் பொறியியலில்
இன்று வேங்கை ஆனது..

அஸ்வினி சுபத்ரா.. இவர்
இயந்திரவியல் கற்றுத் தேர்ந்த
மனிதநேயமிக்க மங்கை..
திவ்யா எனும் நிலாவின் தங்கை..

இவளது திறமையில்
நிலம் நீர் காற்று நெருப்பு
வானம்... அஸ்வினிக்கு
கைகட்டி சேவகம் செய்யும்..
ஆட்டோமொபைல் அறிவியல்
சொன்னபடி கேட்கும்..

ஆட்டோமொபைல் பொறியியலில்
அஸ்வினி ஆராய்ச்சி கேடயமும்
இயந்திரவியல் ஆயுதமும்
கொண்டு உலகினை வெல்வார்
சாதனைகள் பல படைப்பார்..

நீதி நியாயம் நேர்மை
உழைப்பு உயர்வு உண்மை...
சமன்செய்து சீர்தூக்குங்
கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி..
இது அஸ்வினி... அதனால்
சிறக்கும் அவள் பணி...

பெருகிவரும் ஆற்றின் பாதை
குறுக்கே அதற்கு அணை...
வாழ்வின் இனிய பாதை
அன்புக்கு அங்கு ஏது அணை...
அஸ்வினி சுபத்ரா.. பூர்ணசந்தர்..
ஓடிவரும் இரு நதிகள்
வற்றாத அன்பினில் இவர்களுக்கு
வானம் வசப்படும்.. வசந்தத்தின்
பாதைகள் என்றும் நிரந்தரம்...

தாய்த் தமிழகத்தின்
தளவை... நெல்லை.. சென்னை
மகாராஷ்டிரா புனே.. நாசிக்
பஞ்சாப் ஆதம்பூர்
ஆந்திரா ஹைதராபாத்
பார்த்து வளர்ந்த
இந்தியத் திருமகள்.. காலடி
எடுத்து வைத்தாள்
தென் கொரியா சியோல்..

தமிழ்... ஆங்கிலம்...
இந்தி... அஸ்வினிக்கு
அத்துப்படி.. அதை இங்கு
சொல்லியாக வேண்டும்
உள்ளது உள்ளபடி...

மருமகள் அஸ்வினி சுபத்ரா..
வசந்த வாழ்த்துகள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அன்புடன் மாமா...
ஆர் சுந்தரராஜன்.
👍🪷🌷💐🌺😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (12-Jun-24, 10:22 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 92

மேலே