இரண்டும் சதி தான்

திருமணமாகி பத்து வருசம் கழிச்சு

நீயும் உன்னோட மனைவி சுப்ரசாவும்

செஞ்ச தவப்பயனால் இரட்டைக்

குழந்தைகள் பிறந்திருக்குது. இரண்டும்

அழகான மகாலட்சுமிங்க. நீ ரொம்பக்

கொடுத்து வச்சவன்டா ராகேசு. சரி

குழந்தைகளுக்கு பேரை முடிவு

பண்ணீட்டாங்களா? நான் சொன்னா

தமிழ்ப் பேருங்களைச் சொல்லுவேன்.

நீங்க இரண்டு பேரும் புதுமையான இந்திப்

பேருங்களை வைப்பீங்க.

@@@@@@@

ஆமாம் அம்மா. இந்தக் காலத்தில் தமிழ்ப்

பேருங்களைப் பிள்ளைகளுக்கு

வைக்கிறதை நூத்துக்கு தொண்ணூஞ்சு

தமிழர்கள் கேவலமா நினைக்கிறாங்க.

அதனால உங்க பேத்திகள் இரண்டு

பேருக்கும் சமஸ்கிருதப் பேருங்களை

வைக்க முடிவு பண்ணீட்டோம் அம்மா.

@@@@@@

சரி. நல்லது. அந்தப் பேருங்தளைச்

சொல்லுடா ராகேசு.

@@@@@@

இரண்டும் 'சதி'தான்.

@@@@@@

இரண்டும் 'சதி'ன்ன என்னடா அர்த்தம்?

@@@@@@@@@

இரண்டு குழந்தைகள் பேரும் 'சதி'.

@@@@###

எங்கயாவது இந்த மாதிரி அநியாயம்

நடக்குமா இரண்டு குழந்தைகளுக்கு ஒரே

பேரை வைக்கிறது?

@@@@@@@

அம்மா இந்தப் பேருங்க சமஸ்கிருதப்

பேருங்க. எழுத்திலும் உச்சரிப்பில் மும்

வித்தியாசம் இருக்கும்‌.‌ ஒரு குழந்தை 'சதி'

'சதி' (Sati). இன்னோரு குழந்தையோட பேரு

'சதி' (Sathi).

@@@@@@@

என்னடா ராகேசு இரண்டு பேரோட பேரும்

ஒரே மாதிரி இருக்குது.

#@@@@@@##

இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தாலும்

பேருங்களுக்கு வெவ்வேறு அர்த்தம்

இருக்குது அம்மா.

@@@@@@@

அப்ப சரி. ஆனா எதிர்காலத்தில் இந்தப்

பிள்ளைகளுக்கு யாருகூட ஆவது சண்டை

வந்த அவுங்களை "அடியே சதிகாரி"னு

திட்டுனா நம்ம பிள்ளைகள் மனசு என்ன

பாடுபடும்.

@@@@@@@

அதுமாதிரி எல்லாம் நடக்காது அம்மா.

அதைப் பத்தி இப்பவே கவலைப்பட

வேண்டாம். அது மாதிரி சண்டை வந்தா

அவுங்க சமாளிச்சுக்குவாங்க.

@@@@@#

அப்ப சரிடா மகனே ராகேசு.

@@@@@#@####@@@@@@@@@@@@@@@

Sati = Chaste woman, Wife of Lord Shiva.

Sathi = Partner.

எழுதியவர் : மலர் (11-Jul-24, 6:50 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : irandum sathi thaan
பார்வை : 32

மேலே