கவிதை பட்டறை
இது கவிதை பட்டறை
இங்கு ஈக்களும் இசை எழுப்பும்
காகங்களும் சுருதி விலகாமல் பாடும்
ரசனைக்கு முக்கியத்துவம் இல்லை
கனைக்கும் கழுதையும் உண்டு
தனிமை தான் கதாநாயகன்
சில நேரம் உரிமை குரல்களும் எழுப்பும்
பல நேரம் இயற்கையின் குரல்களுக்குள் வாழும்
கடிகாரம் இங்கு மெதுவாக சுழலும்
அதிகாரமாக என்னை எழுப்பாது
ஊர் சுற்ற என்னை தினமும் அழைக்கும்
அலையவிடுவதில்லை
வானத்திற்கு இங்கு நீல நிறம் தான்
ஆனால் காய்ந்துவிடாத ஈரம்
நிலவும் சூரியனும் போட்டி போட்டுக்கொண்டு நகர்ந்தாலும் நான் மெதுவாக நகர்வேன்
என் கூட்டை விட்டு ஆவியாக திரிவேன்
முப்பரிமான முறையில் மாத்தமுடியாத ஆவி
அதிமேதாவிக்கு இங்கு இடமில்லை
பாமரனுக்கு இங்கு சுயநலமில்லை
கடலுக்குள் நங்கூரம் போடுவதில்லை
நகர்ந்து உலாவ பாரபட்ச மில்லை
கனவு உலகில் வாழ்வேன்
ஆனால் நிழல் தோன்றுவதை
சரிபார்த்துக் கொள்வேன்
நிழல் போன்றும் வாழ விரும்புகிறேன்
-மனக்கவிஞன்