குஜாலியைத் தூக்கி எறியுங்கள்

ஆங்கில வழியில் கல்வி பயிற்றுவிக்கும்

பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்துத்

தேறிய மாணவி குஜாலி. தமிழைத் தாய்

மொழியாகக் கொண்டவர். பெரும்பாலான

பெற்றோர்களைப் போல இந்திப் பெயர்

மோகத்தில் தங்கள் பெண் குழந்தைக்கு

'குஜாலி' என்று பெயர் வைத்து ஒரு தமிழர்


நடத்தும் ஆங்கில வழிக் கல்வி போதிக்கும்

பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்

குஜாலியின் பெற்றோர்".

குஜாலி அப்பள்ளியில் ஆறாம்

வகுப்பு படிக்கும் வரை எந்தப்

பிரச்சினையும் இல்லை. வகுப்பில் முதல்

மாணவியாக மதிப்பெண்கள் பெற்று

வந்தாள். குஜாலி என்ற அவள் பெயருக்கு

என்ன பொருள் என்று அவளுக்கும்

தெரியாது; அவள் பெற்றோருக்கும்

தெரியாது.

குஜாலி ஆறாம் வகுப்புத் தேறும்

நிலையில் அவர்கள் வாழும் நகரம்

மாவட்டத் தலைநகரம் ஆனதோடு

மாநகராட்சி ஆக்கப்பட்டது. அம்மாநகரில்

மத்திய அரசு நடத்தும் பள்ளி ஒன்று

துவக்கப்பட்டது.

அந்தப் பள்ளியில் பெரும்பாலான

மாணவ, மாணவியர் பிறமாநில

மொழிகளைக் தாய்மொழியாகக்

கொண்டவர்கள். முதல் வகுப்பில் இருந்தே

இந்தியைத் கட்டாயப் பாடமாக படித்து

வருபவர்கள்.‌

அந்தப் பள்ளியில் குஜாலியைச்

ஏழாம் வகுப்பில் சேர்க்கும் போதே

பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும

அலுவலக ஊழியர்கள் அனைவருமே

குஜாலி என்ற பெயரைக் கேட்டதும் ஒரு

மாதிரியாக சிரித்தார்கள். அதை மகிழ்ச்சி

என்று குஜாலியும் அவள் பெற்றோரும்

எடுத்துக்கொண்டு அவர்களும்

புன்னகைத்தார்கள்.

சேர்க்கை முடிந்ததும் குஜாலியை ஒரு

உதவியாளர் அவளது வகுப்பு அழைத்துச்

சென்று வகுப்பறையில் விட்டுவிட்டுச்

சென்றுவிட்டார். புதிய மாணவி ஒருவர்

வகுப்பறையில் நுழைவதை

வகுப்பறையில் இருந்து ஆசிரியர் மற்றும

மாணவ மாணவியர் ஆவலுடன் பார்த்தனர்.

அவள் உள்ளே சென்றதும் அவள் அமரும்

இடத்தைக் காட்டியபின் "உன் பெயர்

என்ன?" என்று இந்தியில் கேட்டார் அந்த

ஆசிரியர்.

இவளும் முதல் வகுப்பில் இருந்தே இந்தி

படித்துக் கொண்டிருப்பவள் தான். மிக்க

மகிழ்ச்சியுடன் 'குஜாலி' என்று உரக்கக்

கூறினாள். அந்தப் பெயரைக் கேட்டதும்

ஆசிரியர் உட்பட அனைத்து மாணவர்களும்

சத்தமாய்ச் சிரித்தார்கள். குஜாலியும்

சிரித்தாள். அந்த நாள் முழுவதும் அந்த

வகுப்பில் உள்ள ஒவ்வொருவரும்

குஜாலியைப் பார்த்துப் பார்த்துச்

சிரித்தார்கள். அது நட்புடனான சிரிப்பு

என்று குஜாலி நினைத்துக் கொண்டாள்.

கடைசி வகுப்பு முடிந்து குஜாலி

வகுப்பறையை விட்டு வெளியேறும் போது

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட

'கார்முகில்' என்ற பெயருடைய மாணவி

"குஜாலி, உன்னோடு ஒரு நிமிடம்

பேசவேண்டும் நில்" என்றாள். குஜாலி

நின்றபின், "குஜாலி, இன்று நீ உன்

பெயரைச் சொன்னதும் எல்லோரும் ஏன்

சிரித்தோம் என்று தெரியுமா? இன்று நம்

வகுப்புக்கு வந்த ஒவ்வொரு ஆசிரியரும்

உன் பெயரைக் கேட்டார்கள். நீ உன்

பெயரைச் சொன்னதும் எல்லோரும்

சிரித்தார்கள். இன்று நாள் முழுவதும்

உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நம்

வகுப்பில் உள்ளவர்கள் உன்னைப்

பார்த்துச் பார்த்துச் சிரித்தார்கள். ஏன்

தெரியுமா?" என்று கேட்டாள் கார்முகில்.

"எல்லோரும் நட்புணர்வோடு

சிரித்தார்கள் என்றே நினைக்கிறேன்"

என்றால் குஜாலி. "மண்ணாங்கட்டி.

நட்புணர்வு இல்லடி. கிண்டல் சிரிப்பு.

அதற்குக் காரணம் உன் பெயர். "என்

பெயரா? "குஜாலி அருமையான இந்திப்

பெயர்" என்று எங்கள் பகுதியில்

உள்ளவர்கள் சொல்வார்கள்" என்றாள்

குஜாலி. "'குஜாலி'ன்னா 'அரிப்பு'னு

அர்த்தம்டி. இதா அருமையான பெயர்? உன்

பெயரால் நீ அசிங்கப்பட்டது இந்த நிமிடம்


தான் உனக்குத் தெரிய வந்தது. 🏠 உன்

தாய்மொழி தமிழ் தானே. 'அரிப்பு'ன்னா

பேரு வைக்கிறது?

இதைக் கேட்டதும் குஜாலியின்

கண்கள் கண்ணீரைக் குபுக்கென்று

கொட்டியது.

" நீ அழவேண்டாம். நாளைக்கு பள்ளிக்கு

வராதே. பெற்றோரிடம் நடந்ததைச்

சொல்லி ஒரு நல்ல தமிழ்ப் பெயரைச் சூட்டி

வழக்கறிஞரிடம் கூறினால் பெயர் மாற்ற

அறிவிப்பு நாளை மறுநாள்

காலையிலேயே நாளிதழ்களில்

விளம்பரமாக வந்துவிடும். வழக்கறிஞர்

(Notary public) தரும் சான்றிதழையும்

எடுத்துக்கொண்டு பெற்றோருடன்

பள்ளிக்கு வா. உன் பெயர் மாற்றம் நடந்து

விடும். எனக்கும் இதே நிலைதான்

ஏற்பட்டது. எனது இந்திப் பெயரை

நீக்கிவிட்டு கார்முகில் ஆனேன்".

ரொம்ப நன்றிடி கார்முகில்.

@@@@@@@@@@@@@@@########@@@@@

Khujali = Itching.

எழுதியவர் : மலர் (14-Jul-24, 7:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே