என்னம்மா தனியா வந்திருக்கிற

என்னம்மா தனியா வந்திருக்கிற?

அழுதிட்டு இருக்கிற? திருமணம் ஆகி ஒரு

வாரம் கூட ஆகல நீ தனியா

வந்திருக்கிறதைப் பார்த்தா நம்ம பகுதி

மக்கள் என்ன பேசுவாங்கனு உனக்குத்

தெரியாதா?

@@@@@@@

அப்பா நீங்க ஆசைப்பட்டு பெரும்பாடு

பட்டு எனக்கு 'இஷ்டஷ்மிஷ்கியா'னு

அருமையான இந்திப் பேரு மாதிரி உள்ள

பேரைஷவச்சிருக்கிறீங்க. உங்க

பட்டிக்காட்டு எம்.பி.ஏ‌, படிச்ச மாப்பிள்ளை

என் பேரை 'இசட்டமிசுகியா'னு கூப்படறாரு.

அவர் திரைப்படம், தொலைக்காட்சித்

தொடர் எல்லாம் பார்க்கும் பழக்கம்

இல்லாதவர்.

நான் நம்ம வீட்டில வழக்கமாப் பார்க்கிற

தொலைக்காட்சி மர்மத் தொடரைப்

பார்த்திட்டிருந்தேன். அதில் இச்சாதாரி

நாகம் வரும். அவர் காதில்

'இச்சாதாரி'ங்கிற பேரு

விழுந்திருக்கிறது.

அவர் உடனே "திருமிகு மனைவி

அவர்களே உங்கள் பேரை என்னால்

சரியாக உச்சரிக்க முடியல. உன் மனசு

ரொம்ப காயம்பட்டுப் போச்சு. உனக்கு

இந்திப் பேருதான் பிடிக்கும். நான் இங்கே

வரும்போது 'இச்சதாரி'ங்கிற இந்திப் சொல்

என் காதில் விழுந்தது. அது கண்டிப்பாக

பெயர்ச் சொல்லாக்கத் தான் இருக்கும்.

'இச்சாதா'ரி என்ற பெயர்ச் சொல்லை

உச்சரிப்பது எனக்கு எளிதாக இருக்குது.

இனிமேல் உங்களை 'இச்சதாரி'ன்னே

கூப்பிடுவேன். உங்களுக்கு இந்திப் பெயர்

பிடிக்கும் அல்லவா"னு சொல்லிட்டு அந்த

நொடியிலிருநீது என்னை 'இச்சதாரி'ன்னே

கூப்படறாரு. அவர் அப்படி கூப்படறபோது

என் காதில் ஈயத்தைக் காச்சி ஊத்தற

மாதிரி இருக்குது.‌ கோயிலுக்குப் போறதாச்

நம்ம வீட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டேன்.


@@@@@@@@

அழவேண்டான்டா கண்ணு. நீ எங்களுக்கு

எப்பவும் 'இஷ்டஷ்மிஷ்கியா'தான். புறப்படு

உடனே மாப்பிள்ளயைப் பார்த்தூப் பேசி

உன்னை 'இச்சதாரி'னு கூப்பிட வேண்டாம்.

அவருக்குப் பிடிச்சத் தமிழ்ப் பெயரை

உனக்கு வச்சு அந்தப் பேரைச் சொல்லி

உன்னைக் கூப்படச் சொல்லறேன்.

@@@@@@@

சரிப்பா.

எழுதியவர் : மலர் (13-Jul-24, 6:13 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 27

மேலே