விழுஎழுஓடு

விழு...எழு....ஓடு...!
25 / 07 / 2024

விழு...எழு...ஓடு...
ஓடிக்கொண்டே இரு.
உன்முன்னே உன்னைத் தடுக்கும்
ஓங்கிய நெடுஞ்சுவர்.
தாண்டினால்தான் உனக்கு...
உனக்கான வாழ்க்கை.
நீ..தாண்டித்தான்
செல்லவேண்டும்.
அது உனக்கான கட்டளை.
முட்டி மோதுவாயோ? - உன்
முட்டி தேய்ப்பாயோ? - அது
நீ வாங்கிவந்த வரம்.
ஏணி வைத்து ஏறுவாயோ? - இல்லை
மற்றவர் தோளில் ஏறுவாயோ? - இல்லை
வளை நொண்டி போவாயோ..
மகனே உன் சமத்து.
சில சமயம்
நீ வழுக்கி விழுவாய்.
பல சமயம்
ஏணி முறிந்து விழும்.
வளைக்குள் கருநாகம் சீறும்.
எது நடந்தாலும்
நீ ஏறியாக வேண்டும்.
சுவரை
தாண்டியாக வேண்டும்.
உறுதி கொள்...- மனதை
இறுக்கி கொள்.
தாண்டிய பின்
குதிக்க வேண்டும்.
நினைவில் கொள்.
தளர்ந்து போகாதே
தடுமாறி தவிக்காதே.
விழு...எழு... ஓடு...
ஓடிக்கொண்டே இரு.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (25-Jul-24, 8:34 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 75

மேலே