புரிந்துவிடும்
புரிந்துவிடும்....!
29 / 07 / 2024
விழிகள் இரண்டு பார்வை ஒன்று
கால்கள் இரண்டு பாதை ஒன்று
கரங்கள் இரண்டு செயல் ஒன்று
நாசிகள் இரண்டு சுவாசம் ஒன்று
செவிகள் இரண்டு கேள்வி ஒன்று
அந்தோ..!
வாய் ஒன்று வாக்குகள் இரண்டு
இதயம் ஒன்று செயல்பாடுகள் இரண்டு
மூளை ஒன்று எண்ணங்கள் இரண்டு
உருவம் ஒன்று வேடங்கள் இரண்டு
வாழ்க்கை ஒன்று பாதைகள் இரண்டு
இந்த கணக்கை தெரிந்து கொண்டால்
வாழ்வின் சூட்சும மர்மம் புரிந்துவிடும்.