தேசிய உறவினர்கள் தினம்

🏠🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

*தேசிய உறவினர்கள்*
*தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

உறவினர்கள்
மகிழ்ச்சி பூக்களை
மாலையாக்கும் நார்கள்....

இரத்தப் பாசனத்தில்
விவசாயம் செய்து
விளைவித்த பயிர்கள்....

ஒரு குடிமகனுக்கும்
ஒரு தாய்நாட்டு மண்ணுக்கும்
உள்ள உறவு அல்லவா !
ஒரு பெண்ணுக்கும்
தாய்மாமனுக்கும் உள்ள உறவு..!!!

'அத்தை' என்றழைக்கும் போது
அகத்தை அகத்தோடு வைத்து
தைப்பதை
அவதானித்தாயா..?

'மாமா' என்று அழைக்கும் போது
மனம் ஒரு மலராய் மலர்வதை உணர்ந்திருக்கிறாயா...?

'சித்தப்பா! பெரியப்பா! 'என்று அழைக்கையில்
அப்பாவுக்கு இணையான
ஒரு உறவு உண்டென்று
உன் உள்ளம்
உணர்ந்தது உண்டா ?

'சின்னம்மா ! பெரியம்மா!'
என்றழைக்கும் போது
பாசத்தின் வட்டம்
விரிவடைவதை கண்டதுண்டா?

உறவு முறைகளின் பெயர்களெல்லாம்
'வெறும் குறியீட்டு' சொல்லல்ல
அவை 'மந்திரச் ' சொற்கள்....

அன்று
பொதுநல மரத்தில்
கூடு கட்டி வாழ்ந்த
உறவு கிளிகள் எல்லாம்....
இன்று
சுயநலம் மரத்தில்
கூடு கட்ட ஆரம்பித்து விட்டது....

கஷ்டத்திற்கும்
நஷ்டத்திற்கும் என்று இருந்த உறவினர்கள்....
இன்று
கல்யாணத்திற்கு
காரியத்திற்கும் மட்டும்
என்றாகி விட்டது....

ஆனந்த கண்ணீராய்
இருந்தவர்கள்....
அழுகை கண்ணீராய்
இருக்கின்றனர்.....

காயங்களுக்கு
களிம்புகளாக இருந்தவர்கள்
காயங்களுக்கு
காக்கைகளாக இருக்கின்றனர்....

வீழ்ந்த போது
கை கொடுத்தவர்கள்
வீழ்வதற்கு
காலை வாரி விடுகின்றனர்....

நீயும் நானும் என்று
இருந்தவர்கள்
நீயா ? நானா ? என்று
இருக்கின்றனர்......

அன்பு பாசத்தால்
சேர்ந்திருந்தவர்கள்
அந்தஸ்து கௌரவத்தால்
பிரிந்து இருக்கின்றனர்....

நீ கோடீஸ்வரனாக இருந்தாலும்
நீ பிணமாகும் போது
பணம் அல்ல
உறவினர்கள் தான்
'கோடி' போடுவார்கள்
இனியாவது கூடி வாழ்....!!!

கௌரவம்
அந்தஸ்தோடுவாழ்ந்தாலும்
நீ சாகும்போது
உறவினர்கள் தான
'சுற்றி நிற்பார்கள்'
சுற்றத்தோடு வாழ...!!!

தனிமையில்
நீ பாலும் பழமும் சாப்பிட்டாலும்
நாளை உன்னை
மண்ணோ ? நெருப்போ? தான்
சாப்பிடப் போகிறது
அதனால் பழையதே ! ஆனாலும
பந்தங்களோடு சாப்பிட்டு வாழ்...

உறவினர்களுக்காக
எதையும் விட்டுக் கொடுங்கள்
எதற்காகவும்
உறவினர்களை
விட்டு கொடுத்து விடாதீர்கள்
ஏனென்றால் ?
பணத்தால் வாங்க முடியாதது
'உயிர்' மட்டுமல்ல
'உறவினர்களும்' தான்...!!!

*கவிதை ரசிகன்*


🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (24-Jul-24, 7:53 pm)
பார்வை : 24

சிறந்த கவிதைகள்

மேலே