நாளின் தொடக்கம்
நாளின் தொடக்கம்
கரு மை
கரைந்து விட
அது வரை
அங்கிருந்த
மெளனங்கள்
உடைபட்டு
விதம் விதமாய்
குரல் எழுப்பி
பறந்து வந்த
பறவைகள் கூட்டம்
அவிழ்த்து விட்ட
கன்று ஒன்று
பசுமாட்டின்
மடியை தேடி
ஓடி வர
அதற்கு முன்
மடியை கறந்து
நுரை பொங்கும்
பாலுடன் அவசரமாய்
வெளியேறி செல்லும்
மனிதன்
சற்று நேரத்தில்
சடவு முறித்து
எழுந்து வர போகும்
சூரியனின் பார்வை
பட்டு
கரைந்து போக
காத்திருக்கும்
புல் நுனி
பனி துளிகள்
இன்றைய நாள்
தொடங்கி விட்டது
இயற்கையும்
செயற்கையுமாய்