இறைவா நியாயமா

மனிதர்கள் ரசித்து மகிழ்ந்திட
இயற்கைச் செல்வத்தை
வஞ்சனை இல்லாமல்
பூமிக்கு அள்ளிக் கொடுத்து
அழகு பார்க்கும் இறைவன்

அழகினை ரசித்து மகிழும்போது
அவனே இயற்கை சீற்றம் என்னும் அரக்கனைப் படைத்து
பேரழிவை தந்து அழித்திடும்போது
ரசித்து மகிழ்ந்த அப்பாவி மக்களையும், உயிரினத்தையும் தண்டித்து உடன் அழைத்து செல்லுவது நியாயமா??

நெஞ்சத்தை அடைக்கும்
துன்பத்தை காணும் போது
இறைவன் இருக்கின்றானா??
என்ற எண்ணம் மனித மனங்களில்
தோன்றுவது நியாயமே....!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Aug-24, 7:32 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : iraivaa niyayama
பார்வை : 187

மேலே