நதிபோல வந்தாயே நீ
விடியலைத் தேடிடும் வானம் இரவின்
முடிவுரை தன்னை மகிழ்ந்து எழுத
கதிர்விரிந்து காலைக் கவிதை வரைய
நதிபோல வந்தாயே நீ
---இரு விகற்ப இன்னிசை வெண்பா
விடியலைத் தேடிடும் வானம் இரவின்
முடிவுரை தீட்ட மகிழ்ந்து- நெடிய
கதிர்விரிந்து காலைக் கவிதை வரைய
நதிபோல வந்தாயே நீ
-----இரு விகற்ப நேரிசை வெண்பா