முகவரி சொல்ல நிற்கிறது

முகவரி சொல்ல நிற்கிறது

ஒற்றை மரமாய்
தனித்து நிற்கிறது
அந்த மரம்

வருவோர் போவோருக்கு
இந்த வனத்தின்
முகவரி சொல்ல

ஒரு காலத்தில்
அடர்ந்த காடுகளாய்
இருந்ததால்
அடர்வனம்
என்று பெயர்

இன்றும் அதே
பெயர்தான்

சந்தேகபடுபவர்களுக்கு
பதில் தரவே
ஒற்றை மரமாய்
தனித்து நிற்கிறது
இந்த மரம்

அடர் வனம்
என்னும் முகவரி
சொல்ல

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Aug-24, 9:35 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே