நாட்காட்டி

கொக்கரக்கோ விளிப்பதைக் கேளாயோ!
கூச்சலிடும் புள்ளிசையைக் கேளாயோ!
தென்றலின் தீண்டலை உணர்ந்தாயோ!
பொழுதும் மலர்ந்தது
நாளும் மறைந்தது என்றே !
என் முகமூடி கிழித்தெறிந்தாய்!
உன் விடியல் என்னுள்ளே!
உன் தேடல் என்னுடனே!
காலம் உந்தன் உழைப்புடனே!
விழிப்புணர்வுடன் விழித்தெழுவாய்!
கடந்த நாளை அனுபவமாக்கி
இன்றைய நாளில் மொட்டாகி!
நாளை மணங்கமழ்வாய் மலராக!

எழுதியவர் : Loka (12-Aug-24, 7:14 pm)
சேர்த்தது : loka
Tanglish : naatkaatti
பார்வை : 48

சிறந்த கவிதைகள்

மேலே