மழை தினக் கவிதை

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️


*மழை தினம் இன்று*

_*மழை அழகிய கலை*_


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

பூமி தோட்டம்
காய்ந்து விடாமல்
வானிலிருந்து
நீர்விடும்
தோட்டக்காரன் தான்
யாரோ.....?

ஆறு ஏரி
குளம் குட்டை பிள்ளைகளைப் பெற்றெடுத்த அன்னை...

உலகத்திற்கே
படியளக்கும்
பரமசிவன்...... !!!

சிலருக்கு கவிதையாக
சிலருக்கு காதலியாக
சிலருக்கு தோழியாக
சிலருக்கு தோழனாக
சிலருக்கு ஓவியமாக
சிலருக்கு பாடலாக
சிலருக்கு விளையாட்டாக
எத்தனை எத்தனை
அவதாரங்கள்
இந்த மழை...................?

வெட்ட வெளியில்
கட்டணம் இல்லாமல்
நடைபெறும்
இசைக்கச்சேரி......

வான்மகனுக்கும்
வரன் அமையவில்லையோ ?
அதனால்
கண்ணீர்
வடிக்கின்றானோ ?

மேகமகன்
பூமி தாய்க்கு
பச்சைப்பட்டாடை
நெய்து அணிவித்து
அழகு பார்க்கின்றானோ....?

மண்ணுக்கு மழை மீது
அப்படி என்ன காதலோ ?
நான்கு துளி
விழுந்தவுடன்
இப்படி மணம் வீசுகிறதே?

ஏழைகளுக்கு
இறைவன்
அமைத்துக் கொடுத்த
இலவச ஷவர் தான்
இந்த மழையோ......?

இந்த மலை
பல சமயம்
குழந்தையின்
அழுகையாக வரும்....
சில சமயம்
கண்ணகியின்
கோபமாகவும்
பொங்கிவிடும்.....

உழவர்கள் சேற்றில்
கால் வைப்பதற்கு
உழைப்பவர்கள்
சோற்றில் கை வைப்பதற்கும்
முக்கிய காரணம்
இந்த மழை
பூமியில்
அடியெடுத்து வைப்பதால் தான்...

மதிப்பு மிக்கது
பால் தான் என்றாலும்
தாகம் தீர்க்க
தண்ணீரால் மட்டுமே
முடியும்...... !!!

வள்ளுவன்
"வான்சிறப்பு" என்ற
அதிகாரத்தை
முதலாவதாக
வைத்ததில் இருந்தே !
தெரிகிறது
மழையின்
அதிகாரம் என்னவென்று ....!!!

*மழை தின வாழ்த்துகள்!!!*

*கவிதை ரசிகன்*



🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-Jul-24, 7:51 pm)
பார்வை : 40

மேலே