பொண்ணுப் பேரைப் பையனுக்கு வச்சுட்டாரே

என்ன அண்ணே காலையிலிருந்து பதற்றமா இருக்கிறீங்க?

@@@@@@@@@

நகர சபை அலுவலகத்துக்குப் போயிட்டு வந்ததிலிருந்து மனசே

சரியில்லைடா தம்பி.

@@@@@@@@

ஏன் என்ன ஆச்சு?


@@@@@@@@@@

நம்ம தங்கச்சி பையனுக்கு நம்ம குடும்ப சோசியர் இஷ்டலிங்க

சாஸ்திரி ஐயா பொண்ணுக்கு வைக்கிற பேரை வச்சுட்டார். நானும்

அந்தப் பேரை நகரசபை அலுவலகத்தில் பதிவு பண்ணீட்டு

வந்துட்டேன்.

@@@@@@@@

என்ன பேரு அண்ணே?


@@@@

வம்சி

@@@@@@@@@@@@@@@@


நான் இதுவரைக்கும் இந்த மாதிரி பேரைக் கேள்விப்பட்டதில்லை.


@@@@@@@@@@@@@

நானுந்தான்டா. துள்சி பெண் குழந்தை பேரு. அந்தப் பேரு 'சி'யில


முடியுது. 'வம்சி'யும் 'சி'யில முடியுது, கண்டிப்பா 'வம்சி' பெண்


குழந்தை பேராத்தான்டா தம்பி இருக்கும். நான் என்னடா

செய்வேன்?

@@@@@@@@@@@@

சரி. விடுங்க அண்ணே. சில பேருங்களை ஆண் குழந்தைகளுக்கும்


வைக்கிறாங்க. பெண் குழந்தைகளுக்கும் வைக்கிறாங்க. அந்த


மாதிரி பேரு 'வம்சி'யா இருக்கும். .நம்ம தெருவில ஒரு பையன்

பேரு 'ராஜாமணி'. பக்கத்துத் தெருவில ஒரு பொண்ணுப் பேரும்

'ராஜாமணி' அது மாதிரி 'வம்சி'னு வச்சுக்கங்களே. கவலையை

விடுங்க அண்ணே.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Vamsi = Lord Krishna

எழுதியவர் : மலர் (18-Sep-24, 6:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 53

மேலே