ஒரே மெட்டிலே ஒரே சுருதியிலே

அதோ அந்த ஆகாயம் போல்
அதோ அந்த ஆகாயம் போல் பரந்திடவேண்டும்
இதோ இந்த செடிகொடி போல் தழைத்திட வேண்டும்
ஒரே மெட்டிலே ஒரே சுருதியிலே
ஒரே கீதம்
உரிமை கீதம் பாடுவோம்!

பிறக்கும்போது அழுதிடாமல்
பிறப்பதில்லையே
இறக்கும்போது சொல்லிவிட்டு இறப்பதில்லையே
உணர்ச்சிகளை காட்டிடாமல் இருப்பதில்லையே
அன்பும் அறிவும் கொண்டிடாமல் வாழ்வதில்லையே
(ஒரே மெட்டிலே ஒரே சுருதியிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்)

அதோ அந்த ஆகாயம் போல பரந்திடவேண்டும்
இதோ இந்த செடிகொடி போல தழைத்திடவேண்டும்
ஒரே மெட்டிலே ஒரே சுருதியிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

பெருந்தலைவர்கள் ஊக்கத்தினால் ஆக்கம் பிறந்தது
பொதுமக்களின் கடும் உழைப்பால் தேசம் சிறந்தது
அன்று அடைந்த சுதந்திரத்தால் நாடு குளிர்ந்தது!
இன்று உலகம் பாரதத்தை கண்டு வியக்குது!
(ஒரே மெட்டிலே ஒரே சுருதியிலே ஒரே கீதம்
உரிமை கீதம் பாடுவோம்)

அதோ அந்த ஆகாயம் போல் பரந்திடவேண்டும்
இதோ இந்த செடிகொடி போல் தழைத்திடவேண்டும்
ஒரே மெட்டிலே ஒரே சுருதியிலே
ஒரே கீதம்
உரிமை கீதம் பாடுவோம்!
உரிமை கீதம் பாடுவோம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Aug-24, 2:52 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 42

மேலே