சுதந்திர தினம்
அன்று சுதந்திரம் அடைந்தோம்
இன்று தந்திரம் அறிந்தோம் !
அன்று சுகபோகங்களை துறந்தோம்
இன்று போகங்களினால் சுகத்தை இழந்தோம்!
அன்று நமது பாரம்பரியத்தை நாம் கைவிடவில்லை
இன்று நமது பாரம்பரியம் என்ன என்றே தெரியவில்லை!
அன்று மதம் இனம் குலம் இவற்றை ஒதுக்கி வைத்தோம்
இன்று இவற்றை ஜாக்கிரதையாக பதுக்கி வைத்திருக்கிறோம்!
அன்று தியாகம் என்பது ஒருவரின் இயல்பாக இருந்தது
இன்று தன்னலம் என்பது ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்கிறது!
அன்று இன்சொல் வளம் ஒவ்வொருவரையும் கட்டி வைத்திருந்தது
இன்று ஒவ்வொருவரையும் ஸ்மார்ட் செல் வளைத்துப் போட்டுள்ளது!
அன்று காந்தி நாட்டில் முழுவதுமாக வியாபித்திருந்தார்
இன்று இவர் கரன்சி நோட்டில் ஸ்தம்பித்து நிற்கிறார்!
சுதந்திரம் பெற்றதில் பெருமை அடைந்தோம் அன்று
உண்மையான சுதந்திரத்துடன் தான் வாழ்கிறோமா இன்று?