அஜயா

தம்பி நல்லசாமி, நல்லா இருக்கிறயா?


@@@@@@

உம். நல்லா இருக்கிறேன் பெரியம்மா.

நீங்க நல்லா இருக்கிறீங்களா?

@@@@@

எனக்கென்னடா குறை. எம் பசங்க என்னை


நல்லா பாத்துக்கிறாங்க. சரி உன்ற

மகனுக்கு பெண் குழந்தை பிறந்ததாக்

கேள்விப்பட்டேன். நம்ம தமிழ் மக்கள்

வழக்கப்படி உன்ற பேத்திக்கு நல்ல இந்திப்

பேரா வச்சுட்டீங்களா?

#####@@@

வச்சுட்டோம். எங்க சம்மந்தி வீட்டுக்காரங்க

பேத்திக்கு 'விஜயா'ங்கிற‌ பேரை

வைக்கலாம்னு சொன்னாங்க. உலகத்தில்

இலட்சக்கணக்கான பெண்கள் பேரு

விஜயா. அந்தப் பேரை வைக்கிறது

சரிப்படாதுன்னு நாங்க சொல்லிட்டு

பேத்திக்கு 'அஜயா'னு பேரு வச்சுட்டோம்.

உலகத்தில் யாருமே அவுங்க

பொண்ணுக்கு 'அஜயா'னு பேரு வச்சிருக்க

வாய்ப்பில்லை. அஜயா இந்திப் பேரு

மாதிரியே இருக்குது இல்ல.

@@@@@

ஆமாம்டா நல்லசாமி. அருமையான

சுவீட்டான இந்திப் பேரு மாதிரியே

இருக்குதடா நல்லசாமி. சிந்தாபாத்துடா.

எழுதியவர் : மலர் (17-Aug-24, 5:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே