சயந்தவி பயந்தவி

அஞ்சு பிள்ளைகளைப் பெத்து, அஞ்சும் வெவ்வேற நாடுகள்ல

வாழ்ந்துட்டு இருக்கிறாங்க. ஒவ்வொருத்தங்கிட்டயும் போயி மூணு

நாலு வுருசம் இருந்ததால இப்ப பதிநாலு வருசம் கழிச்சு

பொன்னுச்சாமி வீட்டுக்கு வந்திருக்கிறேன். அவந்தான் அதிகம்

படிக்காதாவன்.தோட்டம் தொரவையெல்லாம் பாத்துக்கிறான்.

அவனுக்கு ஒரே மகன். அந்தப் பையனுக்கு காதும் கேக்காது. வாய்

பேசவும் முடியாது.

அந்தப் பையனையும் படிக்க வச்சோம். அவன்

தன்னோட தகப்பனை விட்டுட்டு எந்த வேலைக்கும்

போகமாட்டங்கிறான். அவனுக்கு பத்தாம் வகுப்பு படிச்ச

பொண்ணைக்.திருமணம் பண்ணி வச்சோம். அவனுக்கு ஒரே ஒரு

பெண் குழந்தை. அந்தக் குழந்தை பொறந்த போது நான்

அமெரிக்காவிலே என்ற மூணாவது பையன் வீட்டிலே தங்கிட்டு

இருந்தேன். நான் இல்லாத காலத்தில அந்தக் குழந்தைக்கு

பொன்னுச்சாமி பேரு வச்சிட்டான். இந்திப் பேரு தான். அதுக்காக

அவனைப் பாராட்டணும். ஆனா ராசியில்லாத பேரு.

@@@@@@

ஏண்டா பொன்னுச்சாமி, உன்ற பேத்திக்கு என்னடா பேரு

வச்சிருக்கிற? அதைக்கூட நீ இதுவரைக்கும் எங்கிட்டச் சொல்லவே

இல்லை,

@@@@@@

அம்மா, என்ற பேத்தி பேரு 'பயந்தவி'.

@@@@@

எதுக்குடா அந்தப் பேரை வச்ச?

@@@@@

நம்ம பங்காளி அவம் பேத்திக்கு 'சயந்தவி'ங்கிற பேரை வச்சான்.

நான் என்ன இளிச்சவாயனா? 'சயந்தவி'க்குப் போட்டியா என்ற

பேத்திக்கு 'பயந்தவி'ங்கிற பேரை வச்சேன். ஊரு சனங்க எல்லாம்

பயந்தவி, சயந்தவி இரண்டு பேருமே அருமையான இந்திப் பேருங்க.

'சுவீட்டு நேம்சு"னு இன்னும் சொல்லறாங்க.

@@@@@@

அது சரிடா பொன்னுச்சாமி. நம்ம பங்காளி பேத்தி பேரு 'சயந்தவி'.

அது கெடக்குது உடு. உன்ற பேத்திக்கு நீ வச்ச பேரு சரியில்லைடா.

@@@@@@@

ஏம்மா 'பயந்தவி' அருமையான பேருன்னு ஊரு சனங்களே

சொல்லறாங்க. நீ மட்டும் தான் என்ற பேத்தி பேரு சரியில்லைனு

சொல்லற.

@@@@@@

பயந்தவிக்கு வயசு பத்து ஆகுது. பேருக்குத் தகுந்த மாதிரி அவள் ஒரு

ஈ, எறும்பைப் பாத்தக்கூட பயப்படறா. கரப்பான் பூச்சியைப்

பாத்தாக்கூட படமெடுத்த கருநாக பாம்பைப் பாத்த மாதிரி நம்ம

தெருவே அதிர்ர மாதிரி கத்தறா. பயந்தவி, எதுக்கெடுத்தாலும்

பயப்படறா, இந்தப் பேரு ராசியில்லாத பேருடா பொன்னுச்சாமி.

@@@@@@@@@
நம்ம குடும்ப சோசியகாரர் இதத்தான் சொன்னாரு: "பத்து வயசு

வரைக்கும் பயந்தவி பயந்த சுபாவத்தோடத்தான் இருப்பாள்.

அவளோட பதிமூனாவது வயசு ஆரம்பிச்சதும் வீரமங்கை

வேலுநாச்சியார் மாதிரி மாறிடுவாள்'னு சொன்னாரு. இன்னும் ஒரு

வருசம் பொறுத்துக்க அம்மா.

@@@@@@@@@@@

சரிடா பொன்னுச்சாமி.

எழுதியவர் : மலர் (16-Aug-24, 6:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 35

மேலே