மூத்த குடிமக்கள் தினம் கவிதை
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
*மூத்த குடிமக்கள் தினம்*
*சிறப்பு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
முதியவர்களின் ஒரு சொல்
ஒரு புத்தகம் ....
சில சொல் ஒரு நூலகம்......
பல சொல்
ஒரு பல்கலைக்கழகம்.......
வாழ்க்கை மரத்தில்
பிள்ளைப் பருவும் பிஞ்சு....
இளமை பருவம் காய்
முதுவைப் பருவம் கனி....
கனியிடம் தான்
மரம் முழுமை பெறுகிறது....
முதுமையடையாதவர்கள்
முடிவுரை எழுதப்படாதக்
ஒரு கட்டுரை.....
இளமையின் முடிவிற்கும் முதுமையின் தொடக்கத்திக்கும்
இடையில் தான்
உண்மையான
மனித வாழ்க்கை
துளிர் விடுகிறது.......
காந்தி முதல்
காமராஜர் வரை
பெரியார் முதல்
பேரறிஞர் அண்ணா வரை
விஞ்ஞானிகள் முதல்
ஆன்மிகவாதி வரை
முறியடிக்க முடியாத
சாதனைகளை
முதுமையில் செய்துதான்
நம் முன்னால்
வைத்து
சென்றுள்ளனர்......
இளமை செய்த
தவறுகளுக்கு கூட
முதுமையில் தான்
தண்டனையை
அனுபவிக்கின்றது.....
வலிமை குறைவது
முதுமைக்கு பலவீனமல்ல .....
வலிமை குறைந்த
குழந்தை இடம்தான்
குடியிருக்க வருகிறது
தெய்வமே.......!!!!
தலையின் நரை
முள் கிரீடம் அல்ல....
வாழ்நாட்களை இழந்து
அனுபவத்தை பெற்றதற்காக
காலம் சூட்டும் மணி மகுடம் .....
தோளின் சுருக்கங்கள்
அசிங்கமல்ல....
ஒன்றை இழந்து தான்
ஒன்றை பெற முடியும் என்பது
உலகத்தத்துவம் அல்லவா...?
புற அழகை இழந்து
அகம் தன்னை அழகுபடுத்திக் கொள்கிறது .....!!!
கண்பார்வை
குறைய
ஆரம்பிக்கிறது......
ஏனெனில் ...?
மனம்
ஜடப்பொருளில் இருந்து
விடுபட்டு
உள்நோக்கிய
பயணத்திற்கு ஆயத்தமாகிறது....
முதியவர்கள்
முதலுதவி பெட்டி
அவசியம்
வீட்டில் வைத்திருங்கள்......
வாழ்க்கை வனத்தில்
சுற்றி வந்தவர்கள்
உங்களுக்கு
வழி தெரியாமல்
போகும்போது
வழிநடத்தி செல்வார்கள்
அவர்களோடு வாழுங்கள்....
உங்கள் பிள்ளைகளை
அவர்கள் கையில் கொடுங்கள்
காந்தியாகவோ
காமராஜர் ஆகவோ
அசோகராகவோ
பகத்சிங் ஆகவோ
அம்பேத்கராகவோ
வார்த்தெடுப்பார்கள்
அவர்களை நேசியுங்கள்......
முதுமையை சுமை என்று
நினைத்து விடாதே
நாளை -நீயும்
சுமக்க வேண்டிய
நாட்கள் இருக்கிறது......
மறந்து விடாதே....!
முதுமை தான்
மனிதனின் முழுமை....
நேசித்துப் பார்
தெரியும் அதன் அருமை...!!!
*அனைத்து மூத்த குடிமக்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்*
இவண்
*கவிதை ரசிகன்*
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️