அலைபேசி அலையில்

அலைபேசி அலையில்
😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩
அம்மா உன் கைபிடித்து அறிந்திட்ட உலகம்
அமளி(படுக்கை)யில் வீழ்ந்தின்று அலைபேசியில் நெருக்கம்...

அம்மா உன்வழி நான்கண்ட அறிதி(அறியக்கடவை)
அது வந்து புகுந்ததும் நம்மிடையே மறதி...

இட்டிது(மிகச்சிறியது)எனத்தான் இட்டிட்டாய் கையில்
வெட்டியது நமக்குள் வேர்விட்ட உறவை...

காலத்தை வென்றிட்ட கடாஅ(ஐயுறாத) உறவன்றோ
கடவுள் படைப்பித்த தாய் பிள்ளை உறவு...

அலைபேசிக் கூழ்(கலங்கல்)வந்து அடைத்துவிட என்கண்ணை
பிழையாய்த்தான் வாழ்கின்றேன் பிள்ளையே தாய்தவிர்த்து...

சாலகம்(சாளரம்)வழி கம்பிவடம் சன்னமாய்த்தான் முதல்நுழை
வாழ்யுகம் முழுமைக்கும் வலையினில் சிக்குண்டேன்...

தவல்(கேடு) நேர்ந்து பாடைகட்டி அலைபேசியை அதிலிட்டால்
முகம் பார்த்து நான் சிரிக்க முழுநேரம் கிடைக்குமம்மா...

அழைப்பு நரல்(ஒலித்தல்) நிகழ்த்தி என்னை அணைத்திட்ட அலைபேசி
பிழைப்பெல்லாம் தான் கெடுத்து பெரும் பொழுது அதனூடே...

பத்தல்(சிறுகுழி)எனத்தோன்றியது பழகநான் தொடுகையிலே --இன்று
செத்தாலும் பிரித்தறியா சீர்கேடாய் நமக்குள்ளே...

கண் நிறைந்த பழன(வயல்)மாய் கண்டிட்ட வாழ்க்கை முறை
மண்ணோடு மண்ணாக மண்டிட்டது அலைபேசியில்...

பொழில்(நாட்டின் கூறு)தோறும் கலாச்சாரம் பொதுவாவே வேற்றுமைதான்
அலைபேசி பயன்பாட்டில் அடிமையுற்றது ஏழுலகும்...

மண்டு(நெருங்கிய)விலும் மண்டுவாய் மதிமறந்து வாழ்ந்து விட்டு
மலருக்குள் வண்டுவாய் உன் மடி சாய்வது எப்போது...?
😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩😩

எழுதியவர் : க. செல்வராசு (26-Aug-24, 4:38 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 38

மேலே