விஜியகாந்த பிறந்த நாள் கவிதை

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*புரட்சி கலைஞருக்கு*
*பிறந்த நாள் கவிதை....*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💐💐💐💐💐💐💐💐💐💐💐

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா " என்று
எல்லோரும்
சொல்லித்தான் காட்டினார்கள்...
தலைவா....!
நீ மட்டும் தான்
"வாழ்ந்தே காட்டினாய்..... !"

"அட்சய பாத்திரத்தில்"கூட
உணவு இல்லாமல் போகலாம்....
"உன் வீட்டு பாத்திரத்தில்"
இந்த ஏழைகளுக்காக என்றும்
உணவு இருந்தே இருந்தது....

உண்மை என்று தெரிந்தால்
உரக்கச் சொல்வாய்
எதிரில் நிற்பது
எவனாக இருந்தால் மட்டுமல்ர
எமனாக ஆனாலும்.....!!

பேசியே கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு
மத்தியில்....
நீ பேசியதால்தான்
இந்த நாட்டில்
அநீதிகள் பல கொள்ளப்பட்டன....

"நல்லவர்களுக்கு
காலமில்லை" என்ற
பழமொழி
உன் வாழ்க்கையின் மூலம்
"மீண்டும் புதுபிக்கப்பட்டுள்ளது...!"

நடிகர்கள் எல்லாம்
திரையில் மட்டுமல்ல
தரையிலும்
நடித்துத்தான் வாழ்ந்தார்கள்
நீதான் திரையில் கூட உண்மையாகவே வாழ்ந்தாய்....

தமிழ்நாட்டை
மாற்றியமைக்க நினைத்தாய்.....
உனக்கு
அந்த வாய்ப்பை
நாங்கள் தரவில்லை
ஆம்.......!!!
நாங்கள்
"என்ன பாவம் செய்தோமோ?"

யார் இறந்தாலும்
உனது கண்ணீர்
தவறாமல்
அஞ்சலி செலுத்தியது .....
யார் கஷ்டப்பட்டாலும்
உனது கரம்
உதவி செய்ய நீண்டது....
வள்ளல் எத்தனை என்று
கேட்டால்
இனி யோசிக்காமல்
சொல்லலாம்
"எட்டு என்று
உன்னையும் சேர்த்தே....!!"

உன் உடல்
கருப்பாக இருந்தாலும்
உன் உள்ளம் என்னவோ
"வெண்மையாகவே" இருந்தது.... !!
நீ நடிகனாக வாழ்ந்தாலும்
"யாரிடமும் நடித்து" வாழவில்லை...!!

இறப்பதற்காகவே
வாழ்பவர்களுக்கு மத்தியில்
நீதான் இறந்துள்ளாய்
வாழ்வதற்காகவே......

மனம் உள்ளவரை
உன் நினைவுகள் வாழும்
இந்த மண்ணுள்ள வரை
உனது புகழ் வளரும் .....!!!

*கவிதை ரசிகன்*


💐💐💐💐💐💐💐💐💐💐💐

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Aug-24, 8:42 pm)
பார்வை : 19

மேலே