பண்பின்மை
ஆணாக பெண்ணாக அலியாக பிறந்தோம்
வேதம் கற்றோம் பேதம் மறந்தோமா
அன்பும் பண்பும் அரிதாய் போச்சு
சில மானுடவாழ்வில் அது அரிதாரப்பூச்சு
சமத்துவம் சகோதரத்துவம் மனிதத்தின் கண்கள்
இவ்விரண்டினையும் மறந்தோர்க்கு காண்கலல்ல புண்கள்
பண்பின்மையை வளர்த்தால் வேற்றுமை வளரும்
அன்பை வளர்த்தல் ஒருமைப்பாடு மலரும்
பண்போடு வாழ்ந்தால் பார்போற்றும் நம்மை
வன்பகை வளர்த்தல் பார்தூற்றும் நம்மை
பண்பின்மை சமுதாயத்தை அழிக்கும் விஷக்கிருமி
அன்பே சமுதாயத்தை காக்கும் சஞ்சீவினி
பண்பிலார் வாழ்வில் ஆரிருள் சூழும்
அன்புள்ளோர் வாக்கு ஒளிவீசி வாழும்
தன்மானம் காப்பதும் பெண்மணம் காப்பதும்
பண்புள்ளோர் பாவிக்கும் பிறவிக் கடமை