வாழைப்பழம் தினக் கவிதை
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
*வாழைப்பழம் தினச்*
*சிறப்பு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
முக்கனியில்
நீ கடைசி கனியாக
இருந்தாலும்
பயன் தருவதில்
நீயே ! 'முதல் ' கனி .....
'ஏழைகளின் ஆப்பிள் '
உன்னை கௌரவிக்க
வழங்கப்பட்ட பட்டம்.....
உலக விவசாயக் கல்லூரியில்
உற்பத்தி தேர்வில்
நீ நான்காம் இடத்தை
பிடித்திருக்கிறாய்....
பாராட்டுக்குரிய ஒன்றுதான்....
உனது வயதைக் கேட்டால்
வாயடைத்து நிற்பார்கள்...
ஆம்...!
உனது வயது 7000....
உன்னை 'முக்கனி'
என்பதை விட
'மருத்துவக்கனி' என்பதே
சாலச் சிறந்தது.....!
உன்னை சாப்பிட்டால்
'சாகா வரத்தை' விட
'சந்தோசமாக
இருக்கும் வரம்' கிடைக்கும்...
நீ 'இதயத்தை'
பாதுகாக்கும் 'கவசம்' என்று
இன்னும் பலருக்கு
தெரியாதது தான்
பரிதாபமான ஒன்று....
'சிறிய பழமாக '
நீ இருந்தாலும்
'பெருங்குடலையே !'
சுத்தப்படுத்தும் ஆற்றலைப்
பெற்றுள்ளாய்.....
'மாதவிலக்கின்' போது
வரும் பிரச்சினைகளை
நீ மாதர்களிடமிருந்து
'விலக்குவாய்' என்பதை
மாதர்களுக்கு
'விளக்குவது' யார் .....?
உடல் தேசத்திற்குள்
நுழைய முயற்ச்சிக்கும்
நுண்கிருமி தீவிரவாதிகளை
தாக்கி அளிக்கும்
ராணுவ வீரன்.....
இவ்வளவு பெருமை
பெற்றதால் தான்
இறைவனே !
உன்னை
விரும்புகின்றாரோ.?
பொன்னை வைக்கும் இடத்தில் பூவை மட்டுமல்ல
'உன்னையும்' வைக்கின்றார்கள்
சீப்பு சீப்பாக மட்டுமல்ல
சீப்பாகவும் கிடைக்கிறாய்....
தார் தாராக மட்டுமல்ல
ஊர் ஊராகவும் இருக்கிறாய்.....
சமையும் வரை
பச்சை நிற பாவாடைச்சட்டை
அணிகிறாய்....
சமைந்தப் பிறகு
மஞ்சள் நிற பாவாடைத்தாவணி
அணிகிறாய்
அது இரண்டும் தான்
உனக்கு பிடித்த நிறமோ....?
ஏழைகளுக்கு
எட்டும் கனியாக
இருந்த நீ
மெல்ல மெல்ல
எட்டாத கனியாக
மாறி வருவதும்........
இயற்கையாக
சமைந்த உன்னை
செயற்கையாக
சமைய வைப்பதும்
உன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது....
உன்னை 'தினமும்' சாப்பிட
முடியாவிட்டாலும்
'திருவிழா'வின்போது
சாப்பிடுகிறோம் என்பதே
இப்போதைக்கான திருப்தி.....!!!
*வாழைப்பழம் தின* *நல்வாழ்த்துகள்....*
*கவிதை ரசிகன்*
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌