ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே

காவிரி களஞ்சியங்கள்
கஞ்சியின்றி தவித்தபின்னும்

வேதவிற்பனர்கள் கூடி
வேளாண்மையை கொன்றபின்னும்

ஊருக்கே சோறிட்ட
உழவர்கூட்டம் கூட்டம்

உணவாக எலிக்கறி
உண்டுசெத்த பின்னும்

மரம்கொழித்த காடுகள் மந்திரவாதிகளின்
மணிமண்டபம் ஆனபின்னும்

இதிகாச நாயகர்களுக்கு
ஈரடுக்கு கோவில்கட்ட

விளைநிலங்கள் யாவும்
விலையாகி போனபின்னும்

கோமணாண்டிகள் கூடி
கோட்டைஆள்வோருக்கு எதிராய்

கொடிபிடித்து கோஷமிட்டே
வீதியில் போரிட்டபின்னும்

சொட்டுநீர் பாசனத்திற்கும்
சொட்டுநீர் தராமல்

சொக்கட்டான் ஆடி
சுரனையற்று இருந்தபின்னும்

ஓதுவார் எல்லாம்
உழுவான் தலைக்கடையிலே என்று

ஓதிடுமோ உணர்ச்சியற்ற
ஒப்பனையின் வேந்தர்க்கூட்டம்

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (28-Aug-24, 4:29 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 34

சிறந்த கவிதைகள்

மேலே