கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

கலவரம்
வன்முறையாளர்களின் முயற்சி
வகுத்தாள நினைப்போரின் சூழ்ச்சி
வாக்குவங்கி அரசியல்வாதிகளின்
வஞ்சகம்கலந்த பயிற்சி

கலகம்
ஒடுக்கப்பட்டசமூகத்தின் கிளர்ச்சி
ஓங்கிக்குரலுயர்த்தும் புரட்சி
உரிமையுள்ளவன்நீ உறங்கியதுபோதுமென்று
உசுப்பி எழுப்பும் எழுச்சி

கலவரங்கள் பிறந்தால்
கண்ணிவெடி வெடிக்கும்

கலகம் பிறந்தால்
கட்டாயம் பதில் கிடைக்கும்

கல்லாமை நீக்கியதும்
இல்லாமை நீக்கியதும்

விடுதலை பெற்றதும்
வீரமுழக்கம் இட்டதும்

கலகம் கட்டமைத்த
நியாயம் தான்.

முதிர்ச்சி கொண்ட
கிளர்ச்சியும், புரட்சியும் -என்றும்
முன்னேற்ற நியாயங்களை
முன்னேந்தி செல்லும்

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (31-Aug-24, 4:11 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 25

மேலே