பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கிறோமா

உலகெங்கும் பறைசாற்றி,
உச்சத்திலே கொடியேற்றி,
ஊருக்கெல்லாம் இனிப்பு வழங்கி,
உள்ளுக்குள் கசப்பை விழுங்கும்

உண்மை இந்தியனே
உன்னிடம் ஒரு கேள்வி!
உதிரம்சிந்தி பெற்ற சுதந்திரத்தை
உயிர்மூச்சாய் பேணிக் காக்கிறோமா?

பரந்த வானில் வட்டமிட
பருந்துக்கு உண்டு சுதந்திரம்!

பண் இசைத்து பாடிட
மணிகுயிலுக்கும் உண்டு சுதந்திரம்!!

எண்ணிய கருத்தையாவது
துணிவோடு சொல்லிட
என்னவனே!
என் அருமை இந்தியனே!!
உனக்கு உண்டா சுதந்திரம்?

ஒரு நாள் விடுப்பு,
உல்லாச களிப்பு என்று
சுதந்திரம் காண்கிறாய் நீ!

பட்டொளிவீசும் பாரதக்கொடியை
செங்கோட்டையில் ஏற்றிட
பாரத பிரதமருக்கே தேவை
பலத்த பாதுகாப்பு!

நித்தமும் எல்லையில் போராடும்
நிதர்சன படைவீரனின்
உடலெங்கும் சிராய்ப்பு!!


சாதியென்றும், மதமென்றும்,
சாய்ந்துவிட்ட மானிடத்தில்
சாலையில் எங்கும்
கைகலப்பு, கடையடைப்பு!

கட்டிய மாராப்பையும்
காத்திட முடியாமல்
கன்னி இளம்பெண்களின் கற்பழிப்பு!

வெள்ளையனை அனுப்பிவிட்டு,
கொள்ளையனுக்கு கொடிபிடித்த வனப்பு!

பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பட்டயம் கட்டிவிட பரிதவிப்பு!

ஓட்டை பானையில்
ஊற்றிய நீராய்
ஒழுகிக்கொண்டு இருக்கிறது
உண்மை சுதந்திரம்

வாளேந்தி போரிட்டால்
விரையமாகும் சக்தியென்று - காந்திய

நூலேற்றி பெற்றிட்ட
அறவழி சுகந்திரம் இது!

மறவோர்கள் பெற்றிட்ட
மகத்தான சுகந்திரத்தை

மகிமை மாறாமல் காத்திட
உறுதிக்கொள்ளவோம் நாமும் இன்று!!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (31-Aug-24, 9:43 am)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 18

மேலே