நீர் அறிவீரோ

உலகின் முக்காலும் இந்த நீரே!
உதிரத்தின் முக்காலும் இந்த நீரே!

உயிர்களின் முதல் உணவும் நீரே!
உயிர்மையின் முதல் வரவும் நீரே!

பேதமை மறுத்து நின்றதும் நீரே!
பெய்யும் மழை துளியும் நீரே!

அகிலத்தின் ஜீவராசிகளுக்கு அமிர்தமும் நீரே!
அருவியில் குதித்து அனந்தமாவதும் நீரே!

ஆற்று படுக்கையிலே ஆடுவதும் நீரே!
ஆடிமுடிக்கையிலே சாம்பல் கலப்பதும் நீரே!

அனந்த கண்ணீரின் அன்பதுவும் நீரே!
அருமை மனிதனே அறிவாயோ நீரே!

விசும்பில் விஷம் கலந்ததும் நீரே!
இந்நிலை தொடர்ந்தால் ஏதுனக்கு நீரே!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (6-Sep-24, 8:45 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 38

மேலே