தேடுகிறேன்
கணவனுக்கு நன் மனைவியாக,
மகனுக்கு நல்ல தாயாக,
மாமியாருக்கு நல்ல மருமகளாக,
தாய்க்கு நல்ல மகளாக,
சமூகத்தில் நன் மனிதனாக
என்று அனேக முகமூடிகள்
ஒவ்வொன்றாக அணிந்து அகம்
மறந்து தேடுகிறேன் என்
சுயத்தை - காணவில்லை!!!
கவிபாரதீ ✍️