என்னை தொடாதே
இளஞ்சிவப்பு இதயம்
துடித்து தவிக்கிறது
என்னை தொடாதே...
தொண்டை குழியில்
வார்த்தை மோதுகிறது
என்னை தொடாதே.....
தேகம் அருவருக்க
பெண்மை கலங்குகிறது
என்னை தொடாதே....
மலர்ந்து, மலராத,
வாடியமலரும் போராடுகிறது
என்னை தொடாதே .....
வளையத்திற்கு அப்பால்
வதங்கும் மலர்கள் கதறுகிறது
என்னை தொடாதே....
வளையத்தின் உள்ளே
வதங்கும் பெண்மையின்
குரல் கேட்கின்றதா..?
என்னை தொடாதே....!!!
செவுடாகிப் போன
பயிரைமேயும் வேளிகளே
எங்களை தொடாதே....
கவிபாரதீ ✍️