சரஸ்வதி தேவி

நாவினில் நடமாடும்
சரஸ்வதி தேவியை
அன்றாடம் பூஜிப்போருக்கு
பூவுலகில் கற்பதற்கும்
போதிப்பதற்கும்
சாஸ்திரங்கள்
ஆயிரமாயிரம் உண்டு
காலமெல்லாம்
கற்றுக்கொண்டே இருக்கலாம்

கசடற கற்றதை ஆன்றோர்கள்
தன்னகத்தே வைத்து கொள்ளாமல்
மற்றவருக்கும் கற்பித்து
மகிழ்ச்சி கொள்பவர்களே
மேதினில் சான்றோர்கள்

ஆன்றோர்கள் சான்றோர்கள்
அனைவரும்
சரஸ்வதி கடாஷம் பெற்று
சிறப்போடு வாழ்ந்திட
சரஸ்வதி பூஜை தினத்தின்
இனிய நல்வாழ்த்துகள்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (11-Oct-24, 12:19 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : saraswati thevi
பார்வை : 44

மேலே