கவிதைகளுக்கு அரசர் கவியரசு கண்ணதாசன்

கவிதைகளுக்கு அரசர் கவியரசு கண்ணதாசன் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பாடல்கள் அமைந்திருக்கின்றன. இன்பமா, துன்பமா அல்லது விருப்பா வெறுப்பா அல்லது காதலா தத்துவமா அல்லது பக்தியா ஆன்மீகமா, என்று சொல்லிக்கொண்டு போகலாம். என்னை பொறுத்தவரை இப்படிப்பட்ட அலசல்கள் எப்படி இருக்கும் எனில், ஒருவரின் இடது கண் உயர்ந்ததா, வலது கண் உயர்ந்ததா என்று கூறுங்கள் என்றால், எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கமுடியும்.
‘தங்கம் பாதி வைரம் பாதி அங்கம் என்பதோ நீ விடியும் காலை வெள்ளி புது விவரம் சொல்லும் பள்ளி’
எவ்வளவு அறுபத்தமான காதல் பாடல்.
‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி’
இது எப்படிப்பட்ட ஒரு தத்துவப்பாடல்.

அம்மாவிலிருந்து ஒளவையார்வரை அவ்வளவு அற்புதப்பாடல்களை இயற்றியவர். காதலில் அவர் சளைத்தவர் அல்ல. தத்துவத்தில் அவர் சிறிதும் இளைத்தவர் அல்ல.
மெய்யான ஆன்மீகத்தின் சாரத்தை மிகவும் அழகாக பிரதிபலிக்கும் கண்ணதாசனின் ஒரு பாடல் தான் "பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனை புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்".
கண்ணதாசனுடன் ஓரளவு ஒப்பிட முடியும் என்றால் அது அவர் காலத்திலேயே அவருடன் சேர்ந்து கொடிகட்டிப்பறந்த வாலிதாசன், ஆம் கவிஞர் வாலி.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Nov-24, 2:56 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே