இன்னிசை இருநூறு 25 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 5

இன்னிசை இருநூறு 25 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 5
இன்னிசை வெண்பா

பறழ்பல பன்றி பயப்பினும் என்மன்
கறையடி சுட்டுறுங் கன்றொன்றீன் றாலும்
பிறைபோல் அறிவு பெருகு மகவொன்(று)
உறினுறுவ வேறென் உள. 25

பறழ் – குட்டி, பயப்பினும் – பெற்றாலும், கறையடி – யானை, சுட்டு – மதிப்பு

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (2-Nov-25, 10:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே