பூசாரி மகள்
ஏம்மா உன்னை நான் எங்கயே அடிக்கடி பார்த்த மாதிரி
இருக்குதே.
@@@@@
நானும் இந்த ஊருதானுங்க ஐயா. நான் கல்லூரி போகும் போது
என்னைப் பார்த்திருப்பீங்க.
@@@@@@
உன்னைப் பார்த்தத நம்ம ஊரு மாரியம்மன் கோயில் பூசாரி
பொன்னுச்சாமி சாயல் தெரியுதே.
@@@@@@
நான் அவரோட மகள் தான்ங்க ஐயா.
@@@@@@@@@@@
அடடா அப்பிடியா. பொன்னுச்சாமி எனக்கு நல்ல நண்பர்.என்
பேரு நல்லசாமி. நானும் உங்க அப்பாவும் பத்தாம் வகுப்பு வரை
ஒண்ணாப் படிச்சவங்க. சரி உம் பேரு என்னம்மா?
@@@@@@@@@
என் பேரு 'பூஜா'ங்க ஐயா.
@@@@@@@@@@
பூஜா சமஸ்கிருதப் பேரு. 'பூஜா'-ன்னா தமிழில் 'பூசை' -ன்னு
தானே பொருள்?
@@@@@@
ஆமாங்க ஐயா.
@@@@@@@
பரவாயில்லையே. பூசாரி பொன்னுச்சாமியின் மகள் 'பூசை'.
உன் வகுப்புத் தோழிகள் உன்னை 'பூசை'ன்னு கூப்பிட்டு
கிண்டல் பண்ணுவாங்களா?
@@@@@@@@@@
என் வகுப்பில் படிக்கிற அறுபது மாணாவிகளோட பேருங்களும்
இந்தி, அல்லது சமஸ்கிருதப் பேருங்க தான். தமிழ்ப் பேருள்ள
மாணவி ஒருத்திகூட இல்லை, அதனால என் பேரை யாருமே
கிண்டல் பண்ணமாட்டாங்க ஐயா.
@@@@@@@@@
சரிம்மா. நல்லாப் படி. நல்லசாமி மாமா உன்னோட அப்பாவை
விசாரிச்சாருன்னு சொல்லும்மா.
@@@@@@@
சரிங்க ஐயா.

