கள்ளியின் கனவு!!
தேன் பூக்களை
தேடி செல்லும்
வண்டே!!
ஒரு முறை
என்னையும்
உற்று பார்!!
நான் முள்ளையே
போர்வையாய்
போர்த்தியதால்......
என்
மொழி
உமக்கு
கேட்க வில்லையோ?
நானும்
ஒரு நாள்
உறக்கம் களைவேன்
அப்போது
என்னிலும்
தேன்!!