ஆசைப்படுறேன்.....மா....

காதலியாய் நீ...
காதலனாய் நான்...
கோயில் சிலையாய் நீ..
அபிஷேக பக்தனாய் நான்...
காதல் கவிஞ்சனாய் நீ..
நீ பாடும் கவிதையாய் நான்..
நாட்டிய பேரொளியாய் நீ..
உன் கால் சலங்கையாய் நான்..
சிங்கார வாய்பாட்டாய் நீ..
அதில் சிதறும் நாதமாய் நான்..
வயிற்று பசியாய் நீ..
வாயார உணவை நான்..
உயிர் வாழும் சுவாசமாய் நீ..
அதில் உள்போகும் காற்றாய் நான்..
ரத்தத்தில் சிவப்பனுவாய் நீ..
உன்னை தொடரும் வெள்ளை அணுவாய் நான்..
உன் சிரிப்பாய்..நீ...
உன் இதழோரம் கன்ன குழியாய் நான்..
காரிருள் மேக கருவிழியாய் நீ..
அதை போர்த்தும் வென்திரையாய் நான்..
வெண்குழல் சிலிர்க்கின்ற கழுத்தாய் நீ..
அதில் மின்னிடும் மெல்லிய சங்கிலியாய் நான்..
சினுங்குன சில்லறை அழுகையாய் நீ..
அதிலும் வழிந்திடும் கண்ணீராய் நான்..
அழகிய கருமேக கூந்தலாய் நீ..
அதில் மென்மேக வாசனையாய் நான்..
வெள்ளி கால் கொலுசாய் நீ..
அதில் இருக்கும் சிறு சலங்கை ஒளியாய் நான்..
அன்பில் அடர்மழையாய் நீ..
உன்னை தொடரும் இடி மின்னலாய் நான்..
சில்லென்ற குளிர் காற்றில் நீ..
உன்னை சூழும் போர்வையாக நான்..
முள், புதர் காட்டில் நீ..
உன் பாத காலணியாய் நான்..
இறுதியாக...
மனைவியாக நீ..
கணவனாக நான்..
ஆசைப்படுறேன்.....மா....