விரட்டுகிறது உன் நினைவுகள்

ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்

தாகம் தீர்க்க
அடைக்கலமானேன்
விரட்டுகிறது
உன் நினைவுகள்

பார்க்கும் சமயமெல்லாம்
குனிந்து செல்கிறாய்
மன்னித்துவிடு என்பதுபோல

உன் விழியும் சொல்லும்
என்னை
உயிர்வாழச் சொல்லுமா?

வானமும் பூமியும்
ஓரிடத்தில் இணைகின்றன
நீயும் நானும் (நீயும் - கடவுள்)
இணைந்ததுபோல

பருவ மோகம்
காதல்
அன்மிக மோகம்
கடவுள்

எழுதியவர் : ம. ரமேஷ் (28-Oct-11, 8:28 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 379

மேலே