"மீனாக நான்= காதல் சிறுகதை"
நான் தான் நீர்வாழ் உயிரி
மீன் பேசுகிறேன்.....
============================
அட என்னெங்க சிரிக்கிறீங்க
மீன் எப்படி பேசும்னு தானே....
இது கற்பனை தானே பேசிட்டு
போகட்டுமே விடுங்கப்பா.....
============================
என்னை எல்லோரும் தங்கமீன்
என்றழைப்பார்கள்,
ஆனால் என்னை இந்த உலகில்
நிரந்தரமாக தங்க விடுவதில்லை....
என் வாழ்க்கை சோகமயமானது
என் சோகத்திலும் சுகம் தந்த காதலை
கூறுகிறேன்....
குளத்தில் வசிப்பவன் குறைகளை மறந்துவிட்டும்
மறைத்துவிட்டும் வாழ்பவன்...
எனக்குள்ளும் காதல் பூத்தது தானாக,
அன்றுமுதல் நான் இல்லை நானாக...
எனக்கும் காதல் பூத்ததற்கு காரணம்
ஒரு பெண்ணும் அவளது இருகண்ணும்...
அவளின் அழகு சிரிப்பு, அமைதிபார்வை
என் கர்வத்தை கொல்கிறது,
உறக்கமில்லாமல் வாழ்பவன் நான்
என் வாழ்க்கையே அவளுக்காக வாழ்வதால் தான்...
தினமும் மாலை நேரத்தில் என்னை மயக்கவரும்
மங்கையவள் அன்றொருநாள் அத்திபூதாற்போல்
காலையில் வந்தாள், என் முன்தோன்றியவள்
பாசவலையை வீசுவாள் என நினைத்தேன்
பாசக்கயிரையல்லவா (வலை) வீசினாள்....
அவள் விரித்த காதல் தூண்டிலில் சிக்கிய நான்
கொண்டுவந்த தூண்டிலில் சிக்குவேநென்று நினைக்கவில்லை, அவளைபிடுத்துபோன நான்
உருண்டு பிரண்டு குதித்ததை போல
என்னை பிடித்துவிட்ட சந்தோஷத்தில் அவள்குதித்தாள்...
அவள் மகிழ்ச்சிக்காக நான் மரண பயணத்தில் பயணித்தேன்......
அவள் பார்வையில் சிக்கிய நான்,
அவள் புன்முருவில் சிக்கிய நான்,
அவள் கூந்தல் காட்டில் சிக்கிய நான்,
அவள் பால்முகத்தில் சிக்கிய நான்,
அவள் அன்ன நடையில் சிக்கிய நான்,
அவள் காதல் வலையில் சிக்கிய நான்
அவள் விரித்தவலையில் சிக்காமலா போய்விடுவேன்... இதோ சிக்கிவிட்டேன்,
அவளுக்காக உயிர் வாழ்ந்தேன் நீரோடையில்,
அவளுக்காக உயிர்விட்டேன் அவள் கொண்டுவந்த கூடையில்.....
==============================================
ஒருவர் விட்டு கொடுத்து இன்னொருவர் ஜெயிப்பது தானே காதல்......
==============================================