ரோஜா கூட்டம் ...!

வாடா மலராய்
வலம் வரும்
உன் கண் மலர்கள்

என்னை
வாடா வாடா என்று
வாட்டியதால்
வாடினேன்

ஒரே நாளில்
உதிர்ந்து பூக்கும்
காதல் விதையாய்

பெண்ணே
நீ உரமாக வந்தால்
நான் பதமாக
பார்த்துக்கொள்வேன்

நாளை பயிரிடும்
ரோஜா கூட்டத்தில்
ராஜாவாக ............!

எழுதியவர் : hishalee (4-Nov-11, 10:13 am)
சேர்த்தது : hishalee
பார்வை : 456

மேலே