காலமெல்லாம் காத்திருப்பேன்

தேனடி உன் பேச்சி
தெவிட்டாத என் செவிக்கு !
இன்பமடி எனை காக்கவைத்தால்
தவிக்கின்ற என் மனதில் !

பார்க்கும்விழி பக்கம் எங்கும்
மங்கை உந்தன் வண்ணம் என்றால்!
நோகுமோடி என் விழிக்கு
எந்நொடியும் திறந்திருந்தால்!

சாகுமோடி உன் நினைவு
ஆயிரம் நாள் காத்திருந்தும் !
வேகுமோடி என் மனது
ஆசையாய் நீ நிறைந்த்திருந்தால்!

எழுதியவர் : திருமால்செல்வன் பெ (12-Aug-10, 11:17 am)
சேர்த்தது : திருமால் செல்வன்
பார்வை : 654

மேலே