என் மகள் ஜெலிலாமா


உன்னையே நினைக்கையில்...

என்னென்னமோ செய்யுது மா ...
எண்ணங்கள் குளிருது மா ..
கன்னங்கள் சிரிக்குது மா ..
இருதயம் வலிக்குது மா ...
மனசுக்குள்ள பாசம் தவிக்குது மா ..

நிஜமா.. நிஜமா..

உன் சம்மதம் கேட்காமலே....
உன் அப்பா நான் ஆனேனே..

நிஜமா.. நிஜமா..

வரங்கள் கேட்காமலே....
உன்னை மகளாய் ( வரனாய் ) பெற்றேனே...

நிஜமா.. நிஜமா..

உன்னோட வரவை எண்ணி..
உள்ளுக்குள்ளே மகிழ்ந்தேனே...

நிஜமா.. நிஜமா..

கடைசி ஜென்மம் வரை.. கடவுளிடம் கேட்டேனே..
நீயே என் மகளாக..


இடி மழையோ...எரிமலையோ ...
தளராமல் தாங்கிடுவேன் ...
உன் ஒரு நொடி பிரிவினில் ...
அப்பளமாய் நொறுங்கிடுவேனே...

சின்ன புள்ள உன் மேல..
பெரிய புள்ள என் பாசமிது..

உண்மையை சொல்லனும்னா...
உன்னை நான் காணும் முன்னே..
எனக்கொரு உலகம் இல்லை..
உன்னை கண்டு கொண்ட பின்...
உன் அன்பிற்கு எல்லை இல்லை..

உன் சிரிப்பு ...என் மனசை...
மின்னலாய் தாக்குதடி...
உன் குறும்பு ....எல்லாமே...
கரும்பைவிட இனிக்குதடி..


பா..
ப்பா..
வாப்பா...
டெடி...
டேடி..டேய்..டி..
உன் வாய் சிணுங்கள் போட்ட கோலங்கள் காண ஓர் ஆண்டு ஆனதடி...


என் விரல் பிடிச்சு நீ நடந்த தத்து பித்து முதல் நடை பயணம்..
அன்று நான் மகிழ்ந்த மகிழ்ச்சிக்கு நீயே காரணம்..

உன் அம்மா சுமந்த உன்னை கருவறையில் ஐயிரண்டு மாதம்..
என் இதயறையில் ஆயுள் முழுதும் உன்னை சுமப்பேன் கண்ணே...
சிறுவயதில் .. என் மார்பினில் நீ சிரிச்சு குதித்த ... நாட்கள்...
நீங்காதா திருப்திகளை...தருவதுதான் என்ன..

நெஞ்சருகே...ஒரு கையில் உன்னை சுமந்து கொண்டு...
வீதிவுழா சென்ற நாட்கள் மனதை வருடும் மெல்ல..
உன் கையால் நான் செய்த கடற்கரை மணல் முதல் வீடு..
அதை நினைக்கையில் என் மனம் படும் ஆனந்த பாடு..

இரவெல்லாம் கதை கேட்டு, ஒத்தை கண்ணை மூடி கொண்டு ,
நீ கேட்கும் கதை கேள்விக்கு இன்றும் பதில் தெரியாதடி..

அன்னைக்கு கைமாறாய் அவள் நாமம்
சூட்டவில்லை உனக்கு ..
பாசத்தின் பிரதிபலிப்பாய் வைத்தேனடி..
பெயர் பொருத்தம் பக்காவாய் பொருந்த பாக்கியம் செய்தாயடி..

உன்னை விட்டு கடல் கடந்து...
நான் இங்கு இருந்தாலும்...
உன் போர்வைக்குள்ளே தான்...
எந்தன் உசுரும் உறங்குது மா ...


தொடரும்.....

எழுதியவர் : கலிபா சாஹிப் (4-Nov-11, 7:50 pm)
பார்வை : 3061

மேலே