தாலாட்டுப்பாடல் ....!
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
கதிரறுக்கும் களத்திலே - கண்ணே
காலை பசு வந்து போகுதப்பா
முளை பிஞ்சிக் கொல்லையிலே - கண்ணே
முயல் ஓடி போகுதப்பா
பட்டு சேலை தொட்டினிலே - கண்ணே
படுத்து உறங்கும் பொன்மணியே
பச்சைக்கிளியும் பாடிவரக் - கண்ணே
பட்டு ராசா நீயுறங்கு
பாடும் அம்மா பக்கத்திலே - கண்ணே
பருப்பு சோறும்ங் கிண்ணத்திலே
தேனும் பாலும் பல வகையாம் - கண்ணே
தேவிட்டாமலே உண்டுறங்கு