இன்பம் - 386
பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..................................................................................
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
கவிதையாய் பொருள்
..................................................................................
எவர் அணுகவும் எளியனாய்
ஏதும் கடுஞ்சொல் கூறாதோனாய்
மன்னனாக இருந்துவிட்டால் -விரியும்
மண்ணெங்கும் அவன் ஆட்சியே.
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்
========================================